ட்ரம்பின் விருப்பத்துக்கேற்ப கருத்துகளை திருத்த முடியாது: சமூக ஊடகங்களை குறிவைக்கும் அமெரிக்க அதிபர் மீது வழக்கு

By ஏஎன்ஐ

ட்விட்டரில் தவறான தகவல்களை பதிவிட்டதற்காகவும் கருப்பர் கொலைகளுக்கு எதிரான போராட்டங்களை எதிர்த்து வன்முறையைத் தூண்டும் விதமாகவும் அதிபர் ட்ரம்ப் பதிவுகள் இட்டதற்கு ட்விட்டர் தளம் கடும் எச்சரிக்கைகளை விடுத்ததோடு அவருக்கு எச்சரிக்கையும் விடுத்தது.

இதனை கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானதானது என்று அதிபர் ட்ரம்ப் திரிப்பதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில் ட்ரம்ப் சமூக ஊடகங்களைக் குறிவைக்கும் விதமாக உத்தரவு ஒன்றில் கையெழுத்திட்டார்.

இதனையடுத்து நிச்சயம் அதிபர் ட்ரம்ப் வழக்குகளை எதிர்கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஜனநாயகம் மற்றும் தொழில்நுட்பத்துக்கான மையம் ட்ரம்பின் செயல் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது.

அதில், “ஆன்லைன் தணிக்கைக்கு எதிரான செயல் உத்தரவு” என்ற இந்த உத்தரவு மே 28ம் தேதி கையெழுத்திடப்பட்டுள்ளது. இந்த உத்தரவு சட்டத்தின் முதல் திருத்தத்தை பொருட்படுத்தாமல் மீறியுள்ளது. அதன்படி அரசியல்சட்ட ரீதியாகக் காக்கப்பட வேண்டிய ஆன்லைன் ஊடகங்கள் மற்றும் தனிநபர்களின் கருத்துக்களை குறைப்பது மற்றும் அதை ஒன்றுமில்லாமல் செய்வதாக அதிபரின் உத்தரவு உள்ளது.

அதிபரின் விருப்பத்துக்கும் நன்மைக்கும் ஏற்ப கருத்துகளை மாற்றியமைக்குமாறு அரசு ஆன் லைன் ஊடகங்களுக்கு உத்தரவிட முடியாது. அதிபரின் செயல் பேச்சுச் சுதந்திரத்தின் மீதான நேரடி தாக்குதலாகும். அதிபரின் இந்த உத்தரவை தடை செய்வது கருத்துச் சுதந்திரத்தை காப்பதோடு 2020 தேர்தலை நேர்மையாக நடத்துவதற்கு அவசியமானதாகும்” என்று அந்த வழக்கில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது தவறான தகவல்களை, பொய்ச்செய்திகளை, வெறுப்புணர்வைத் தூண்டும் செய்திகளைப் பரப்புவதிலிருந்து சமூக ஊடகங்களைக் காப்பாற்றுவதற்கான அந்த ஊடகங்களின் பொறுப்பில் தலையிட்டு பேச்சு சுதந்திரம் என்றபெயரில் அதிபர் ட்ரம்ப் தவறான செய்திகளையும் பொய்ச்செய்திகளையும் ஊக்குவிக்கும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார் என்பதே வழக்கின் சாராம்சம்.

பிரபல சட்ட நிறுவனமான மேயர் பிரவுன் ஜனநாயக மற்றும் தொழில்நுட்பத்துக்கான அமைப்புக்காக வாதிடுகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

9 hours ago

உலகம்

22 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

10 days ago

மேலும்