மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கரோனா தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. ஆனால் ரஷ்யா உள்ளிட்ட கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, உலக சுகாதார அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மார்கெரட் ஹாரிஸ் கூறுகையில், ”ஐரோப்பாவைப் பொறுத்தவரையில் மேற்கு ஐரோப்பாவில் தொற்று எண்ணிக்கை குறைந்து வருகிறது. பெரிய அளவில் குறையவில்லை என்றாலும், படிப்படியாக குறைந்து வருவதைக் காண்கிறோம். ஆனால் கிழக்கு ஐரோப்பா நாடுகளில், குறிப்பாக ரஷ்யாவில், தொற்று எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது” என்று தெரிவித்தார்.
பிரான்ஸ் ஜெர்மனி, ஸ்பெயின், போர்சுக்கல், உள்ளிட்ட நாடுகள் மேற்கு ஐரோப்பிய நாடுகளில் மார்ச் மாதத்தில் கரோனா தொற்று தீவிரமடைந்தது, மே மாதத்தில் அங்கு தொற்று தீவிரம் குறைந்தது. ஆனால் கிழக்கு ஐரோப்பா நாடான ரஷ்யாவில் தொற்று எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையில் ரஷ்யா மூன்றாவது இடத்தில் உள்ளது. இதுவரையில் அங்கு 4.2 லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஆனால் இறப்பு எண்ணிக்கை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. 5,0376 பேர் இதுவரையில் கரோனா தொற்றால் பலியாகியுள்ளனர்.
உலக அளவில் 60 லட்சம் பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 3.7 லட்சம் பேர் பலியாகி உள்ளனர். அதிகபட்சமாக அமெரிக்காவில் 18 லட்சம் பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டாவது இடத்தில் பிரேசில் உள்ளது. அங்கு 5.29 லட்சம் பேர் கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
54 mins ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago