காங்கோவைத் துரத்தும் இன்னொரு ஆபத்து: எபோலா பரவல் கண்டுபிடிப்பு

By ஏஎன்ஐ

ஏற்கெனவெ கரோனாவினால் உலக நாடுகள் திக்குமுக்காடி வரும் நிலையில் காங்கோவில் புதிய எபோலா வைரஸ் தொற்றுக்கள் வங்கத்தா மண்டலத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதையத்து அங்கு பீதி நிலவி வருகிறது.

இதுவரை 6 பேருக்கு எபோலா கண்டுப்பிடிக்கப்பட்டதில் 4 பேர் மரணமடைந்துள்ளனர். 2 பேர் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

இந்நிலையில் உலகச் சுகாதார அமைப்பின் டெட்ரோஸ் அதனம் கேப்ரியேசஸ் கூறும்போது, “கோவிட்-19 மட்டும் இந்த உலகை அச்ச்றுத்தும் நோய் அல்ல எபோலா உள்ளிட்ட இன்னும் சில வைரஸ் அச்சுறுத்துல்களும் உள்ளன” என்று எச்சரித்தார், இப்போதைக்கு கரோனா மீது நம் கவனம் இருந்தாலும் உலகச் சுகாதார அமைப்பு இதே போன்ற பிற மக்கள் தொற்று நோய் மீதும் தீவிர கண்காணிப்புக் கொண்டுள்ளது, என்றார் கேப்ரியேசஸ்.

இது காங்கோவின் 11வது எபோலா வைரஸ் தாக்கமாகும், 1976-ல் காங்கோவில் முதன் முதலில் கண்டுப்பிடிக்கப்பட்டது.

உலகச் சுகாதார அமைப்பு இது தொடர்பாகக் கூறும்போது, “காங்கோ விலங்குகள் பண்ணைகளில் எபோலா வைரஸ் உள்ளது. அது நாட்டின் பல பகுதிகளிலும் எபோலா வைரஸ் தாக்குதல் இருக்கும் நிலை உள்ளது” என்று எச்சரித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

உலகம்

3 hours ago

உலகம்

8 hours ago

உலகம்

9 hours ago

உலகம்

11 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

மேலும்