இந்திய எல்லையில் ஒட்டுமொத்த நிலைமைகள் சீராகவும் கட்டுப்படுத்தக் கூடியதாகவும் இருப்பதாக சீன வெளியுறவு அமைச்சகம் புதனன்று (27-5-20) தெரிவித்துள்ளது.
மேலும் இருநாடுகளுக்கிடையேயும் உரையாடல், ஆலோசனைகள் மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் உள்ளன என்று சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஸாவோ லிஜியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
“இருநாட்டுத் தலைவர்களும் வந்தடைந்த முக்கியமான கருத்தொற்றுமையயும் இருநாடுகளுக்கு இடையிலான உடன்படிக்கைகளையும் நாங்கள் பின்பற்றி வருகிறோம்” என்று தெரிவித்தார்.
சீன அதிபர் போருக்குத் தயாராக இருக்கவும், நாட்டின் இறையாண்மையைக் காக்கத் தயாராகுங்கள் என்றும் சீன ராணுவத்துக்கு உத்தரவிட்டதை அடுத்து பரபரப்பு நிலவியது. இதையடுத்தே சீன வெளியுறவு அமைச்சர் இவ்வாறு விளக்கம் அளித்துள்ளார்.
“எங்கள் பிராந்திய இறையாண்மையையும் பாதுகாப்பையும் எல்லையில் அமைதியையும் ஸ்திரத்தையும் உறுதி செய்ய வேண்டியுள்ளது. இப்போது சீனா-இந்திய எல்லையில் ஒட்டுமொத்தமாக நிலைமைகள் சீராகவும் கட்டுப்பாடுகளுடனும் உள்ளது” என்றார்.
இருநாடுகளும் 3,500 கிமீ எல்லையைப் பகிர்ந்து கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
6 hours ago
உலகம்
11 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago