உலகம் முழுவதும் சுமார் 56,86,282 பேர் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அமெரிக்காவின் மருத்துவப் பல்கலைக்கழகமான ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் கூறும்போது, ''உலகம் முழுவதும் கரோனாவால் 56,86,282 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் மட்டும் 17, 25,275 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவுக்கு அடுத்து பிரேசிலில் 3, 94,507 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை 3 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் கரோனா தொற்றுக்குப் பலியாகியுள்ளனர். இதில் அதிகபட்சமாக அமெரிக்காவில் மட்டும் 1,00,572 பேர் பலியாகியுள்ளனர். பிரிட்டனில் அதிகபட்சமாக 37,048 பேர் பலியாகியுள்ளனர். பிரான்ஸில் 28,530 பேரும், ஸ்பெயினில் 27,117 பேரும் பலியாகியுள்ளனர்.
கரோனா தொற்றிலிருந்து சுமார் 24,30,788 பேர் குணமடைந்துள்ளனர்.
» மே 31-ம் தேதிக்கு பிறகு கோயில்கள், தேவாலயங்கள், மசூதிகள் திறக்கப்படும்: எடியூரப்பா அறிவிப்பு
» வெளிமாநிலங்களில் சிக்கிய தொழிலாளர்களுக்கு உதவி வாக்குவங்கியை மேம்படுத்த முயலுகிறதா காங்கிரஸ்?
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தெற்காசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டன், பிரேசில், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்தன.
கரோனா வைரஸுக்கு எதிரான போரை உலக நாடுகள் தீவிரமாக எதிர்கொண்டு வருகின்றன. இன்னும் பல நாடுகளில் ஊரடங்கு, எல்லை மூடல் ஆகியவை தொடர்கின்றன. இந்த நிலையில் கரோனா வைரஸுக்கு தடுப்பூசி இதுவரை கண்டுபிடிக்கப்படாததால் நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவது உலக நாடுகளின் தலைவர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் சவாலாக உள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
5 hours ago
உலகம்
5 hours ago
உலகம்
17 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago