பிரிட்டனில் ஜூன் 15 ஆம் தேதி முதல் கடைகள் திறப்பு

By செய்திப்பிரிவு

பிரிட்டனில் ஜூன் 15 ஆம் தேதிக்குப் பிறகு கடைகள் திறக்கப்படும் என்று பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் கூறும்போது, “ஜூன் 15 ஆம் தேதி முதல் வணிக நிறுவனங்கள், தனிநபர் கடைகள், சிறு அத்தியாவசியக் கடைகளைத் திறக்க உத்தரவிட்டுள்ளோம். பள்ளிகளைப் படிப்படியாகத் திறக்கக் கேட்டுக் கொண்டுள்ளோம். கரோனா வைரஸைத் தடுப்பதற்கு அரசு எடுக்கும் இரண்டாம் கட்ட முயற்சிகளில் பிரிட்டன் மக்கள் நம்பிக்கை கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ஜூன் 8-ம் தேதி முதல் அயர்லாந்து தவிர்த்து, பிற நாடுகளிலிருந்து பிரிட்டனுக்கு வரும் பயணிகள் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும். மீறினால், அபராதம் விதிக்கப்படும் என்றும் பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

கரோனா பலி எண்ணிக்கையில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் பிரிட்டன் உள்ளது. பிரிட்டனில் இதுவரையில் 2.5 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 36,914 பேர் பலியாகியுள்ளனர்.

மார்ச் மாதத்தில் கரோனா வைரஸ் தீவிரம் அடையத் தொடங்கியதைத் தொடர்ந்து, உலக நாடுகள் தங்கள் எல்லைகளை மூடின. விமானச் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டது. தற்போது சில நாடுகளில் கரோனா தீவிரம் குறைந்துள்ள நிலையில், அந்நாடுகள் பொருளாதாரச் சூழலைக் கணக்கில் கொண்டு ஊரடங்கைத் தளர்த்தி அதன் எல்லைகளைப் படிப்படியாகத் திறந்து வருகின்றன.

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் 55,90,358 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,47,907 பேர் பலியாகி உள்ளனர். 23,66,574 பேர் குணமடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

மேலும்