கரோனா வைரஸ் பொருளாதாரத்தில் ஏற்படுத்திய பாதிப்பு அடுத்த 10 ஆண்டுகளுக்கு நீடிக்கும் என்பதால், எளிதாக மீண்டுவருவது என்பது கடிமானது என்று முன்னணி பொருளாதார வல்லுநர் நோரியல் ரூபினி தெரிவித்துள்ளார்.
உலகளவில் டாக்டர் டூம் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படும் பொருளாதார வல்லுநர் நோரியல் ரூபினி, 2008-ம் ஆண்டு அமெரிக்கப் பொருளாதார சிக்கலை சரியாகக் கணித்துக் கூறியவர்.
துருக்கியில் பிறந்து இத்தாலியில் வளர்ந்து, அமெரிக்காவில் குடியிருக்கும் ரூபினி நியூயார்க் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறார். ஹார்வார்ட் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்ற ரூபினி ஐஎம்பி அமைப்பில் பொருளதாார ஆலோசகராக இருந்தார்.
அதுமட்டுமல்லாமல் அமெரிக்க ரிசர்வ் வங்கி, உலக வங்கி, இஸ்ரேல் ரிசர்வ் வங்கி ஆகியவற்றில் ஆலோசகராக ரூபினி பணியாற்றிய அனுபவம் மிக்கவர். அதிபர் கிளிண்டன் காலத்தில் அமெரிக்க அரசின் பொருளாதார ஆலோசகராக ரூபினி பணியாற்றிய அனுபவம் மிக்கவர் என்பது குறிப்பிடத்தக்கது
கரோனா வைரஸ் உலகளவில் மனிதர்களுக்கு உடல்ரீதியான பாதிப்புகளையும், உயிர்களையும் காவு வாங்கியதோடு மட்டுமல்லாமல் உலகப்பொருாதாரத்தையும் புரட்டிப்போட்டுள்ளது. உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தை கொண்டுள்ள அமெரிக்கா கூட தனது பொருளாதார செயல்பாட்டை நிறுத்த வேண்டிய நிலைக்கு வந்து லாக்டவுன் அறிவித்தது. கரோனா ஏற்படுத்திய பொருளாதார பாதிப்பு மனித உயிர்களைக் காட்டிலும் அதிகமாக இருந்து வருகிறது என்று பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரி்விக்கின்றனர்
இந்த சூழலில் டாக்டர் டூம் என்று அழைக்கப்படும் நோரியல் ரூபினி கரோனா வைரஸ் பாதிப்பால் உலகப்பொருளாதாரம் மீள்வது குறித்து பிபிசி சேனலுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கரோனா வைரஸ் உலகப்பொருளாதாரத்தில் ஏற்படுத்திய பாதிப்பு 10 ஆண்டுகளுக்குவரை நீடிக்கும் என்பது எனது கணிப்பு. இந்த பாதிப்பிலிருந்து ஒவ்வொரு நாடும் எளிதாக மேலே வருவது என்பது கடினமான காரியம்
கரோனா வைரஸுக்குப்பின் சுருக்கமாகச் சொன்னால், பலநாடுகளில் வேலையிழப்பு அதிகமாக ஏற்படும், முன்புபோல் வேலைக்கு ஆள்எடுப்பது இருக்காது. அப்படி ஓர் ஆண்டுக்குள் உலகப்பொருளாதாரம் கரோனாவிலிருந்து மீண்டுவிட்டதாக உலக நாடுகள் அறைகூவல் விடுத்தால் அந்த பொருளாதாரம் நோய்பீடித்ததாக, வலுவிழந்ததாக, புத்துணர்ச்சியில்லாததாகவே இருக்கும்
இதுவரையாரும் பார்த்திராத பொருளாதார சரிவு உலக நாடுகளில் இருக்கப்போகிறது. உலகப்பொருளாாரச் சிக்கலின்போது கூட உற்பத்தி தடைபடுவதற்கும், வீழ்ச்சி அடைவதற்கும் 3 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது. ஆனால் கரோனா பாதிப்பால், 3 ஆண்டுகள் எடுக்கவில்லை, 3 மாதங்கள் எடுக்கவில்லை, 3 வாரங்களில் பொருளாதாரத்தின் ஒவ்வொரு பிரிவும் மளமளவென சரிந்துவிட்டது.
உலகப்பொருளாதாரத்தில் மீட்சி என்பது “U”வடிவத்தில்தான் இருக்கும் அல்லது “L” வடிவத்தில் இருக்கும். அதாவது மிகப்பெரிய பொருளாதார மந்தமாகத்தான் இருக்கும். கரோனாவினால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் வளர்ந்த, வளர்ச்சி அடைந்துவரும் நாடுகள், வளர்ச்சி குன்றிய நாடுகளில் ஏழைகளின் வேலையிழப்பு மோசமாக இருக்கும்
(யு- வடிவ பொருளாதார மீட்சி என்பது பொருளாதர வளர்ச்சி அடிமட்டத்துக்கு வீழ்்ச்சி அடைந்து, நீண்டகாலத்தில்தால் மெதுவாக வளர்ச்சி அடையும் அல்லது வளர்ச்சி இல்லாமலும் போகலாம்)
(எல்-வடிவ பொருளாதார மீட்சி என்பது பொருளாதார வளர்ச்சி திடீரென மோசமாக சரிவைச்சந்தித்து, அந்த பாதிப்பு நீண்டகாலத்துக்கு தொடர்வதாகும்)
கரோனாவால் பறிபோன வேலையிழப்புகள் அனைத்தும் பாதியளவுதான் மீண்டும் கிடைக்கும், அதிலும் முன்பு வாங்கிய ஊதியத்தில் பாதியளவும், எந்தவிதமான பலன்களும் இல்லாமல் இருக்கலாம், அல்லது பகுதிநேர வேலையாகக்கூட இருக்கலாம். வேலையில் ஒருவிதமான பாதுகாப்பின்மை, வருமானமும், ஊதியமும் சராசரியாகத்தான் இருக்கும்
2-ம்கட்ட கரோனா அலை வந்துவிடும் என்பதால், இன்னும் பல நாடுகள் முழுமையாக பொருளாதார நடவடிக்கையைத் தொடங்காமல் உள்ளன. நீ்ங்கள் கடைகளைத் திறந்துவைக்கலாம், கடைக்கு வந்து சென்றவர்கள் திரும்பி வரப்போகிறார்களா என்பதுதான் கேள்வி. சீனாவில் உள்ள பெரும்பலான ஷாப்பிங் மால்கள் வாடிக்கையாளர்கள் இன்றி வெறிச்சோடிக்காணப்படுகிறது. பாதி விமானங்கள் இயக்கப்படவில்லை. ஜெர்மனியில் கடைகள் திறந்திருக்கின்றன, ஆனால் பொருட்களை வாங்க மக்கள் கடைக்கு செல்லவில்லையே
வளர்ச்சி அடைந்த பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடுகளைவிட வளர்ந்துவரும் பொருளாதாரத்தைக் கொண்ட ஆசியாவில் நல்ல பொருளாதார வளர்ச்சி இருக்கும். ஆனால், சீனா, அமெரிக்கா இடையே பெரும் பிளவு உருவாகும் இரு நாடுகளில் யார் சூப்பர் பவர் என்பதை தீர்மானி்ப்பதில் ஆசிய நாடுகள் வலிந்து தேர்ந்தெடுக்க வேண்டியதாக இருக்கும்
இந்த ஆசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் உலகின் மற்ற நாடுகளுக்குச் செல்லும் போது நீங்கள் எங்களுடன் இருக்கிறீர்களா அல்லது எதிராக இருக்கிறீர்களா என்ற கேள்வி எழும்.
நீங்கள் எங்களுடைய செயற்கை நுண்ணறிவு முறைகளை, தொழில்நுட்பங்களை, ரோபாட்டிக்ஸை பயன்படுத்துங்கள், அல்லது எங்களின் போட்டியாளரின் தொழில்நுட்பங்களை பயன்படுத்துங்கள் என்ற போட்டி வரும். உலகில் இன்னும் பிரிவுகள் உருவாகும்.
இவ்வாறு ரூபினி தெரிவித்தார்
முக்கிய செய்திகள்
உலகம்
3 hours ago
உலகம்
3 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
19 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago