கரோனா தொற்று: நான்காவது இடத்தில் பிரேசில் - அதிகரிக்கும் உயிர் பலி

By செய்திப்பிரிவு

பிரேசிலில் கரோனா தொற்றுக்கு கடந்த 24 மணிநேரத்தில் 674 பேர் பலியாகினர். இந்த நிலையில் கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் வரிசையில் பிரேசில் நான்காவது இடத்தில் உள்ளது.

இதுகுறித்து ஊடகங்கள் தரப்பில், ''பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனா தொறுக்கு 674 பேர் பலியாகினர். மேலும், பிரேசிலில் 2,54,220 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அதிகபட்ச தொற்று ஏற்பட்ட நாடுகளில் பிரேசில் நான்காம் இடத்தில் உள்ளது'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பிரேசிலில் கரோனா தொற்றுக்கு இதுவரை 16,853 பேர் பலியாகினர். 1 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

பிரேசில் அதிபர் போல்சனாரோ கரோனா வைரஸ் தொடர்பான தடுப்பு நடவடிக்கைகளை மிக அலட்சியமாகக் கையாண்டு வருகிறார் என்று கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.

இந்த நிலையில் பிரேசிலில் கரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடர்பாக அதிபர் போல்சனாரோவுக்கும் சுகாதாரத்துறை நிபுணர்களுக்கும் இடையே தொடர்ச்சியாக கருத்து வேறுபாடு ஏற்பட்டு வருகிறது. அவருடைய முடிவுக்கு மாற்றாக கருத்து தெரிவித்ததைத் தொடர்ந்து சுகாதாரத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்து வந்த லூயிஸ் ஹென்ரிக் மாண்டெட்டா கடந்த மாதம் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்நிலையில் ஒரு மாதத்துக்குள்ளாகவே புதிதாக நியமிக்கப்பட்ட அமைச்சரான நெல்சன் டீச்சும் பதவி விலகியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து சுகாதாரத் துறை அமைச்சராக இதுவரை யாருடைய பெயரும் அறிவிக்கப்படாமல் உள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

உலகம்

6 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

8 days ago

உலகம்

9 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

மேலும்