ஈரானில் கரோனா பரவல் இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளதால் அங்கு இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7,057 ஆக அதிகரித்துள்ளது
மத்திய கிழக்கு நாடுகளில் கரோனா தொற்றால் ஈரான் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளது.
கடந்த மாதம் முதல் மாகாணங்களில் நோய் தொற்று எண்ணிக்கையை வெளியிடுவதை ஈரான் நிறுத்தியது. இந்த நிலையில் ஈரானில் கரோனா தொற்று பரவல் இரண்டாம் கட்டத்தை அடைந்துள்ளதாக ஈரான் அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறும்போது, “ஈரானில் கரோனா தொற்று இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது. ஈரானில் கரோனா தொற்றுக்கு இதுவரை 7,057 பேர் வரை பலியாகினர். குஜெஸ்தான் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது” என்று தெரிவித்துள்ளார்.
ஈரானில் இதுவரை 1, 22,492 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஈரானில் சமீப காலமாக பாலுசிஸ்தான், சிஸ்டன் பகுதிகளில் கரோனா பரவல் அதிகமாகி வருகிறது. இதன் காரணமாகவே தற்போது தொற்று அதிகரித்துள்ளது.
கரோனா தொற்று அதிகமானதைத் தொடர்ந்து ஈரானின் கிழக்குப் பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் அந்நாட்டு அரசு அதிகரித்துள்ளது.
மத்தியக் கிழக்கு நாடுகளில் கரோனா தொற்றால் ஈரான் அதிகமாக பாதிப்புக்குள்ளாகியுள்ளது. ஈரானில் பிப்ரவரி மாதம் பரவத் தொடங்கிய கரோனா மார்ச் மாதம் தீவிரத்தை அடைந்தது. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்னர் கரோனா தொற்று குறைந்த நிலையில் தற்போது மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
8 hours ago
உலகம்
8 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
16 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago