கரோனா தடுப்பு மருந்து தொடர்பான ஆராய்ச்சியில், லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழகம் உருவாக்கியுள்ள மாதிரியை குரங்குகளிடம் சோதித்து பார்க்கப்பட்டது. அத்தடுப்பு மருந்து குறிப்பிடத்தக்க பலனை அளித்திருப்பதாக ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைகழத்தின் மருத்துவ ஆராய்ச்சிக் குழு தெரிவித்துள்ளது.
கடந்த ஆறுமாதங்களாக கரோனா தொற்று உலக நாடுகளை அச்சுறுத்தி இருக்கிறது. இதுவரையில் உலக அளவில் 45 லட்சம்பேர் கரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளனர். 3 லட்சம் பேர் பலியாகி உள்ளனர்.
கரோனா தொற்று 5 மாதங்களை கடந்தப் பிறகு கரோனா வைரஸுக்கு இதுவரை மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. சமூக இடைவெளியைப் பேணுதல், கை,கால்களை கழுவுதல், முககவசம் அணிதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள மட்டுமே உலக அளவில் மேற்கொள்ளப்படுகின்றன. நோய்தொற்றுக்கு உள்ளானவர்களை தனிமைப்படுத்தி, கூடுதல் மருத்துவ கண்காணிப்பு மட்டுமே வழங்கப்படுகிறது.
இந்நிலையில் உலக அளவில் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள் கரோனாவுக்கான தடுப்பு மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ளன.
» தமிழகத்தில் இன்று 477 பேருக்கு கரோனா; 6 ஆயிரத்தைக் கடந்தது சென்னை; மொத்தம் 10, 585 பேர் பாதிப்பு
இந்த நிலையில் லண்டன் ஆக்ஃஸ்போர்ட் பல்கலைகழகம் கரோனா தடுப்பு மருந்தை முதற்கட்டமாக தயாரித்து உள்ளது. முதல் பரிசோதனையாக குரங்குகளிடம் சோதித்துப் பார்க்கப்பட்டது.
இதுகுறித்து ஆக்ஸ்போர்ட் பல்கலைகழகம் வெளியிட்ட செய்தியில்,” தடுப்பு மருந்து கரோனா வைரஸை எதிர்கொள்வதற்கான திறனை பெற்றிருக்கும் அறிகுறிகள் தற்போது உறுதி செய்யப்பட்டது.
கரோனா வைரஸ் நுரையீரலை மிகத் தீவிரமாக பாதிக்கும் தன்மை கொண்டது. இந்த மருந்து குரங்குகளின் உடலில் செலுத்தபட்டதுபோது, கரோனா வைரஸால் ஏற்படும் நுரையீரல் பாதிப்பை இது தடுத்து நிறுத்து உள்ளது. அதே சமயம் இந்த மருந்து பெரிய அளவில் பக்கவிளைவுகளையும் ஏற்படுத்தவில்லை.
கரோனா தடுப்பு மருந்து தொடர்பான ஆராய்சியில் முதற்கட்ட வெற்றி எட்டப்பட்டு இருக்கிறது. இருந்தபோதிலும், மனிதர்களிடம் முழுமையாக சோதிக்காத வகையில் மருந்தின் தன்மையை உறுதி செய்ய முடியாது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்” என்று கூறப்பட்டுள்ளது.
செப்டம்பர் மாதத்துக்குள் கரோன மருந்து கண்டுபிடிக்கப்படும் என்று ஆக்ஸ்போர்டு பல்கலைகழக மருந்துவ ஆராய்ச்சி குழு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago