ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் 414 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஆப்கானிஸ்தானில் சுகாதாரத் துறை அமைச்சகம் தரப்பில், “ஆப்கானிஸ்தானில் புதிதாக 414 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,053 ஆகவும் அதிகரித்துள்ளது.
ஆப்கன் தலைநகர் காபூலில்தான் அதிகப்படியான கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. காபூலில் மட்டும் இதுவரை 1,700க்கும் அதிகமானவர்களுக்கு கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இனி வரும் நாட்களில் கரோனா தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தீவிரவாதிகள் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருவது அரசுக்குப் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக, ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குலில் பச்சிளம் குழந்தைகள் இருவர் உட்பட 24 பேர் கொல்லப்பட்டனர். இது உலக அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உலகம் முழுவதும் 45, 27,127 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,02,000 பேர் பலியாகி உள்ளனர். 17 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
15 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago
உலகம்
9 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago