ஆப்பிரிக்க நாடுகள் கரோனா பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளைத் தீவிரமாக மேற்கொள்ளத் தொடங்கியுள்ளதால் அங்கு கரோனா நோய்த் தொற்று தீவிரம் குறையும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்க நாடுகளின் அரசுகள் கரோனா பரவலைத் தடுக்கும் முயற்சிகளில் கவனம் செலுத்தாவிட்டால், அந்நாடுகளில் இவ்வருடம் மட்டும் 2 லட்சம் பேர் வரையில் கரோனா தொற்றால் இறக்கக் கூடும் என்று உலக சுகாதார அமைப்பு முன்னரே எச்சரித்திருந்தது. இதனை தொடர்ந்து ஆப்பிரிக்க நாடுகளின் அரசுகள் நோய்த் தடுப்பு முயற்சிகளை மிகத் தீவிரமாக மேற்கொண்டன.
சமூக இடைவெளி, கை கால்களைக் கழுவுதல் போன்ற பாதுகாப்பு முறைகளை மக்களைத் தீவிரமாகக் கடைப்பிடிக்க வலியுறுத்தியது. இந்நிலையில், அரசுகளின் இம்முயற்சிகளால் ஆப்பிரிக்க நாடுகளில் கரோனா தொற்று தீவிரம் குறையும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் ஆப்பிரிக்க நாடுகளுக்கான பிரதிநிதி மாதிஷிடிசோ மோய்தி கூறும்போது, “ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள கிராமப்புறங்களில் கரோனா தொற்று சமூகப் பரவல் ஏற்படும் நிலையில் 26% பேர் நோய்த்தொற்றுக்கு ஆளாவார்கள் என்று கூறியிருந்தோம். ஆனால், தற்போது ஆப்பிரிக்க அரசுகள் திட்டமிட்ட தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதன் காரணமாக அங்கு நோய்ப் பரவலின் தீவிரம் குறையும். தற்போது அங்குள்ள கிராமப் பகுதிகளில் நோய்த்தொற்று குறைந்திருக்கிறது.
» ஒடிசாவைப் புயல் தாக்கலாம் என எச்சரிக்கை: 12 மாவட்டங்களுக்கு உஷார் நிலை
» என் வாழ்வில் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவேன் ப்ரோ: ஜி.வி.பிரகாஷ் உருக்கம்
அத்துடன், ஆப்பிரிக்க நாடுகள் அத்தியாவசிய சேவைகளைத் தொடர்ந்து வழங்க வேண்டும். உணவு விநியோகம் தடைபடாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். உணவின்றித் திணறுபவர்களுக்கு உணவைக் கொண்டு சேர்க்க வேண்டும். உலக சுகாதார அமைப்பு தொடர்ந்து கரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இணைந்து பணியாற்றி வருகிறது” என்றார்.
மேலும், கரோனாவை எதிர்கொள்வதற்கான மூலிகை மருந்தைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஆப்பிரிக்காவில் உள்ள மூலிகை மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்ற உலக சுகாதார அமைப்பு தயாராக இருக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
முக்கிய செய்திகள்
உலகம்
21 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
9 days ago
உலகம்
9 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago
உலகம்
10 days ago