சீனாவில் புதிதாக 15 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 11 பேருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து சீன சுகாதார அதிகாரிகள் கூறும்போது, ''சீனாவில் புதிதாக 15 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் 11 பேருக்கு எந்தவித நோய் அறிகுறிகளும் இல்லை. கரோனா நோய்த்தொற்றால் பாதிப்பு ஏற்பட்டவர்களில் 4 பேர் ஜிலின் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள்'' என்று தெரிவித்துள்ளனர்.
முன்னதாக, கரோனா நோய்த் தொற்று முதலில் ஏற்பட்ட வூஹானில் கடந்த வாரம் 6 பேருக்கு மீண்டும் கரோனா நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து வூஹானில் உள்ள 1 கோடி பேருக்கும் மருத்துவப் பரிசோதனை செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். மேலும், ஜிலின் மாகாணத்தில் கரோனா தொற்று தற்போது பரவத் தொடங்கியுள்ளதால் அதனைக் கட்டுப்படுத்த கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.
சீனாவில் கரோனா நோய்த் தொற்றின் முதல் கட்டம் தீவிரத்தை அடைத்து ஏப்ரல் மாதம்தான் குறைந்தது. இந்த நிலையில் சீனாவில் கரோனாவின் இரண்டாம் கட்ட அலை தொடங்கிவிட்டதா என்று அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். மேலும், தற்போது சீனாவில் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களுக்கு எந்தவித அறிகுறியும் ஏற்படவில்லை.
» ஊரடங்குக்கு முன்பாக பிரிட்டனில் 25% பேர் கரோனா தொற்றால் பாதிப்பு: ஆய்வில் தகவல்
» தொடர்ந்து பரவும் கரோனா: உலகம் முழுவதும் 45,27,127 பேர் பாதிப்பு
அறிகுறி இல்லாத நபர்களிடமிருந்து பிறருக்கு மிக வேகமாகவும், அதிக எண்ணிக்கையிலும் கரோனா நோய்த்தொற்று பரவும் என்றும் மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
முதன்முதலாக கரோனா தொற்று சீனாவில் உள்ள வூஹான் நகரில் கடந்த டிசம்பர் மாதம் உறுதி செய்யப்பட்டது. சில நாட்களிலே கரோனா தொற்று மிக வேகமாகப் பரவத் தொடங்கியது. பரவலைக் கட்டுப்படுத்த வூஹான் முழுமையாக முடக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து 76 தினங்களுக்குப் பிறகு கடந்த ஏப்ரல் 8-ம் தேதி ஊரடங்கு அங்கு தளர்த்தப்பட்டது.
இந்த நிலையில் மீண்டும் கரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளனது. சீனாவில் கரோனா தொற்றால் பேர் பாதிக்கப்பட்டனர். 82,933 பேர் பாதிப்படைந்துள்ளனர். 4,633 பேர் பலியாகினர். 78,209 பேர் குணமடைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
15 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago
உலகம்
9 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago