பிரான்சைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களைச் சேர்ந்த ஆய்வாளர்கள் புகையிலை, நிகோடின் ஆகியவை கரோனா வைரஸைத் தடுக்கும் வல்லமை கொண்டது என்று ஒரு கட்டுரையை எழுதி வெளியிட்டனர்.
மாறாக புகைப்பிடித்தல், நிகோட்டினால் நுரையீரல் பாதிப்படைந்து கரோனா முதலில் நுழைந்து செயலிழக்கச் செய்யும் நுரையீரல் பகுதி மேலும் கரோனாவை ஈர்ப்பதாகவே அமையும் என்று உலகச் சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
மேலும் இது போன்ற ஆராய்ச்சிகளெல்லாம் நிரூபிக்கப்பட்ட ஒன்றல்ல.
இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றைத் தடுக்கும் என்பது குறித்து உலகச் சுகாதார அமைப்பின் பொதுச்சுகாதார நிபுணர்கள் ஆய்வுகளை மதிப்பாய்வு செய்த போது, “புகைப்பிடிக்காதவர்களை ஒப்பிடும் போது புகைப்பிடிப்பவர்களுக்குத்தான் கரோனா இன்னும் தீவிரமாக நோயாக மாறிவிடும்.
கோவிட் 19 என்ற தொற்றுநோய் முதலில் நுரையீரலைத்தான் தாக்கும். புகைப்பழக்கம் முதலில் நுரையீரலை பழுதடையச் செய்யும் இதனால் கரோனா வைரஸ் உள்ளிட்ட வைரஸ் தொற்றுக்களை எதிர்த்து உடல் எதிர்ப்பாற்றலை பயன்படுத்த முடியாமல் வலுவிழக்கச் செய்யும். இதுவரை வந்த ஆய்வுகளெல்லாம் புகைப்பிடிப்பவர்கள்தான் அதிக ரிஸ்க்கில் உள்ளனர்” என்று எச்சரித்துள்ளது.
நிகோடின் கரோனாவிலிருந்து காக்கும் என்று பிரான்ஸ் ஆய்வாளர்கள் எப்படிக் கூறுகிறார்கள் என்றால், புகைப்பிடிப்பவர்கள் உடலில் ஏற்கெனவே இருக்கும் நிகோட்டின் நாவல் கரோனா வைரஸ் எந்த ஏற்பியுடன் (ரிசப்டார்) பிணைகிறதோ அந்த நிகோடினிக் அசிட்டைல்கோலின் ரிசப்டாருடன் நிகோடின் இருப்பதன் காரணமாக கரோனா நுழைவது தடுக்கப்படுகிறது என்பதே அவர்கள் வாதம்.
ஆனால் இதனை உலகச் சுகாதார அமைப்பு வன்மையாக மறுப்பதோடு புகைப்பிடிப்பவர்களுக்கு கரோனா ரிஸ்க் அதிகம் என்ற எச்சரிக்கையை விடுத்துள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
14 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
10 days ago