ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் குண்டுவெடித்து 8 பேர் பலி

By ஏஎஃப்பி, ஏபி

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நேற்று காலை லாரியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

கிழக்கு காபூலில், நடுத்தர வகுப்பு மக்கள் அதிகம் வசிக்கும் ஷா ஷாஹீத் என்ற இடத்தில் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. சாலையில் 6 மீட்டர் ஆழத்துக்கு பள்ளம் ஏற்படும் வகையில் இந்த குண்டு வெடிப்பு சக்தி மிக்கதாக இருந்தது. இதில் அருகில் உள்ள கட்டிடங்கள், வீடுகள் சேதம் அடைந்தன. கட்டிடங்களின் ஜன்னல் கண்ணாடிகள் சிதறின.

இதில் 8 பேர் இறந்ததாகவும் 128 பேர் காயம் அடைந்ததாகவும் காபூல் காவல்துறை செய்தித் தொடர்பாளர் கூறினார்.

காபூல் காவல்துறை தலைவர் அப்துல் ரஹ்மான் ரஹிமி கூறும் போது, “குண்டுவெடிப்பில் பாதிக் கப்பட்ட அனைவரும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட பொதுமக் கள். மிக அதிக அளவில் உயிர்சேதம் ஏற்படுத்தும் நோக்கத்தில் இத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பு நடந்த இடத்துக்கு அருகில் ராணுவ முகாம் உள்ளது. இதை இலக்காக வைத்து இத்தாக்கு தல் நடத்தப்பட்டதா என உறுதி யாகத் தெரியவில்லை” என்றார்.

சுகாதார அமைச்சக செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “இந்த சம்பவத்தில் நூற்றுக்கணக் கானோர் காயம் அடைந்துள்ளனர். இதில் கண்ணாடி சிதறல்கள் தாக்கி காயம் அடைந்தவர்களே அதிகம்” என்றார்.

தலிபான் தலைவர் முல்லா ஒமரின் மறைவு குறித்த அறிவிப் புக்குப் பின் காபூலில் நடந்த முதல் முக்கிய தாக்குதல் இதுவாகும். என்றாலும் இத்தாக்குதலுக்கு இது வரை எந்த அமைப்பும் பொறுப் பேற்கவில்லை.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

5 hours ago

உலகம்

5 hours ago

உலகம்

7 hours ago

உலகம்

9 hours ago

உலகம்

11 hours ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்