கரோனா வைரஸ்: லெபனானில் மீண்டும் 4 நாட்களுக்கு ஊரடங்கு

By செய்திப்பிரிவு

ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் லெபனானில் நான்கு நாட்களுக்கு மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து லெபனான் பிரதமர் ஹசன் கூறும்போது, “கடந்த வாரம் நோய்த்தொற்று பூஜ்ஜிய எண்ணிகையில் வந்தது. ஆனால், சிலர் தற்போது கட்டுப்பாடுகளை சரியாகப் பின்பற்றாததால் அது அபாயத்தில் முடியும். படிப்படியாகப் பொருளாதாரத்தை மீட்பதற்கு ஐந்து கட்டத் திட்டத்தை அரசு மறு மதிப்பீடு செய்ய உள்ளது” என்றார்.

லெபனான் அரசு அறிவித்துள்ள இந்த ஊரடங்கு உத்தரவு இன்று (புதன்கிழமை) இரவு முதல் அமல்படுத்தப்படுகிறது.

லெபனானில் கரோனா தொற்றால் 870 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 234 பேர் குணமடைந்துள்ளனர். 26 பேர் பலியாகினர்.

கரோனா வைரஸுக்கு இதுவரை உலக அளவில் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் பலியாகியுள்ளனர். அவ்வாறு மனிதனிலிருந்து இன்னொருவருக்குப் பரவும் சந்தர்ப்பங்களைக் குறைப்பதற்காக லெபனான் நாட்டு நிபுணர்கள் 2 ரோபோக்களை வடிவமைத்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது.

சீனாவிலின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸால் ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா மத்தியக் கிழக்கு நாடுகள், ஆப்பிரிக்க நாடுகள் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளன.

உலகம் முழுவதும் 43,63,042 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2, 93,348 பேர் பலியாகியுள்ளனர். 16,13,346 பேர் குணமடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

6 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

மேலும்