கரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துகிறது துபாய்

By செய்திப்பிரிவு

ஐக்கிய அரபு அமீரகத்தின் முக்கிய நகரான துபாயில் நட்சத்திர ஓட்டல்களில் விருந்தினர்களுக்காக கடற்கரையை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பொது கடற்கரைகள் திறக்கப்படாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அமீரகத்தில் மக்கள் நடமாட்டத்திற்கான கட்டுப்பாடுகளை தளர்த்துவதற்கான பல புதிய முயற்சிகளுக்கு துபாயின் நெருக்கடி மற்றும் பேரழிவு முகாமைத்துவக் குழு ஒப்புதல் அளித்தது வருகிறது.

அதன்படி துபாயில் நட்சத்திர ஓட்டல்களில் தனியார் கடற்கரைகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் பொது கடற்கரைகள் திறக்க அனுமதி இல்லை.

ஓட்டல்கள் மற்றும் வணிக நிறுவனங்களை கட்டுப்பாட்டுகளுடன் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 75% கார் நிறுத்தும் நிலையங்கள் மூடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்கள் சமூக இடைவெளிகளை பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய அமீரகத்தில் கரோனா தொற்றால் 19,661 பேர்பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை கரோனா தொற்றுக்கு 203 பேர் பலியாகி உள்ளனர். 5,000க்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

7 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

மேலும்