ஈகைத் திருநாளின் ஐந்து நாள் விடுமுறையில் முழு ஊரடங்கை அமல்படுத்த சவுதி அரசு திட்டம்

By செய்திப்பிரிவு

சவுதி அரேபியாவில் ஈகைத் திருநாளின் ஐந்து நாள் விடுமுறையின்போது 24 மணி நேர முழு ஊரடங்கை அமல்படுத்த சவுதி அரசு திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து சவுதி உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறும்போது, “சவுதியில் ரம்ஜான் விடுமுறையான மே 23 ஆம் தேதி முதல் மே 27 ஆம் தேதி வரை 24 மணி நேர ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது.

கரோனா வைரஸ் தொடர்பாக விதிக்கப்பட்ட அனைத்துக் கட்டுப்பாடுகளும் ரம்ஜான் விடுமுறை முடியும்வரை அமலில் இருக்கும். ரம்ஜானுக்கு முந்தைய நாள் வரை காலை 9 மணி முதல் 5 மணி வரை பொதுமக்கள் வெளியே செல்ல அனுமதி உண்டு” என்று தெரிவித்துள்ளார்.

சவுதி அரேபியாவில் செவ்வாய்க்கிழமை 1,900 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை அங்கு கரோனா வைரஸுக்கு 264 பேர் பலியாகி உள்ளனர். 15,000க்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.

சவுதியில் இதுவரை 42,925 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சுமார் 4,82,374 பேருக்கு இதுவரை கரோனா தொற்றுக்கான பரிசோதனையை சவுதி அரசு நடத்தியுள்ளது.

கரோனா தொற்று காரணமாக சவுதி அரேபியாவில் பொருளாதாரம் பெரும் சரிவைச் சந்தித்துள்ளது. கச்சா எண்ணெய் வளத்தால் செல்வச் செழிப்பில் இருந்த சவுதி அரேபிய அரசு, அதலபாதளத்துக்குச் சென்றுள்ளது. இதனால் அரசின் செலவுகள், திட்டங்களில் 2,600 கோடி டாலர்களைக் குறைத்துக்கொள்ள சவுதி அரசு முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

11 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

8 days ago

உலகம்

8 days ago

உலகம்

9 days ago

உலகம்

9 days ago

உலகம்

9 days ago

மேலும்