ரஷ்யாவில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,21,344 ஆக அதிகரித்துள்ளது.
ரஷ்யாவில் கடந்த ஒருமாதமாகவே கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக கரோனாவால் பாதிப்புக்குள்ளான முதல் பத்து நாடுகளில் ரஷ்ய தற்போது மூன்றாவது இடத்தில் உள்ளது.
முதல், இரண்டாம் இடங்களில் முறையே அமெரிக்கா மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் உள்ளன.
இதுகுறித்து அமெரிக்காவில் இயங்கும் மருத்துவப் பல்கலைக்கழகமான ஜான் ஹாப்கின்ஸ் கூறும்போது, “ரஷ்யாவில் கடந்த ஆறு நாட்களுக்கும் மேலாக ஒவ்வொரு நாளும் சுமார் 10,000க்கும் அதிகமானவர்களுக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் ரஷ்யாவில் கடந்த 24 மணிநேரத்தில் 11,012 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரஷ்யாவில் கரோனா பாதிப்பு 2,21,344 ஆக அதிகரித்துள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலும் நேற்று மட்டும் ரஷ்யாவில் 88 பேர் கரோனா தொற்றால் இறக்க, பலியானவர்களின் எண்ணிக்கை 1,915 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை ரஷ்யாவில் கரோனா தொற்றிலிருந்து 39,801 பேர் குணமடைந்துள்ளனர்.
ரஷ்யாவில் கரோனா தொற்று தீவிரமாக இருப்பதால் அதனைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன் ரஷ்ய அதிபர் புதின் ஆலோசனை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
முக்கிய செய்திகள்
உலகம்
1 hour ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago
உலகம்
9 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago
உலகம்
10 days ago