ஐரோப்பிய நாடுகளில் கரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட பிரான்ஸ் இன்று முதல் ஊரடங்கைத் தளர்த்தியுள்ளது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், தெற்காசிய நாடுகள், ஆப்பிரிக்க நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஐரோப்பிய நாடுகளில் பிரிட்டன், இத்தாலி, ஸ்பெயின், பிரான்ஸ் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்தன.
இந்த நிலையில் தற்போது அங்கு தொற்றுத் தீவிரம் குறைந்துள்ள நிலையில் ஊரடங்கை அந்நாடுகள் தளர்த்தி வருகின்றன. அந்த வகையில் பிரான்ஸில் திங்கட்கிழமை முதல் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது.
பிரான்ஸில் பள்ளிக்கூடங்கள், சிகை அலங்கார நிலையங்கள், வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் திறக்க இன்று (திங்கட்கிழமை) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியைப் பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிகை அலங்கார நிபுணர் ஒருவர் கூறும்போது, “எல்லோரிடமும் சிறு பதற்றம் தெரிகிறது. நாங்கள் எங்கு செல்கிறோம் என்பது எங்களுக்குத் தெரியாது. ஆனால், நாங்கள் வெளியே வந்திருக்கிறோம்” என்று தெரிவித்துள்ளார்.
பிரான்ஸில் சுமார் 8 வாரம் ஊரடங்கு நிலவியது. இந்த நிலையில் தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளது. பிரான்ஸில் கரோனா தொற்றுக்கு 1,76,970 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 26,380 பேர் பலியாகியுள்ளனர். 56,217 பேர் குணமடைந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் 41,02,849 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2,82,719 பேர் பலியாகியுள்ளனர். 14,93,490 பேர் குணமடைந்துள்ளனர்
முக்கிய செய்திகள்
உலகம்
55 mins ago
உலகம்
9 hours ago
உலகம்
14 hours ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
9 days ago
உலகம்
9 days ago
உலகம்
9 days ago