மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 177 இந்தியர்கள் விமானம் மூலம் திருச்சி அழைத்து வரப்படுகின்றனர்.
கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் உலகின் பெரும்பாலான நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவிலும் கடந்த 40 நாட்களாக ஊரடங்கு அமலில் உள்ளது. ஊரடங்கு உத்தரவு காரணமாக சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானப் போக்குவரத்து முடங்கியுள்ளது. இதனால், வேலை மற்றும் கல்வி நிமித்தமாக வெளிநாடுகளுக்கு சென்ற இந்தியர்கள் நாடு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர்.
கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் இந்தியாவுக்குள் வரமுடியாமல் பல்வேறு நாடுகளில் சிக்கி இருக்கும் இந்தியர்களை தாயகம் அழைத்துவர வந்தேபாரத் மிஷன் தி்ட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. கடல்மார்க்கமாக கப்பற்படைக் கப்பல்கள் சமுத்திர சேது திட்டத்தை செயல்படுத்தி வெளிநாடுகளில் சி்க்கியவர்களை மீட்டு வருகின்றன
கடந்த 7-ம் தேதி முதல் 14-ம் தேதிவரை பல்வேறு கட்டங்களாக வெளிநாடுகளில் இருந்து இந்தியர்கள் வந்தேபாரத் மிஷன் திட்டம் மூலம் இந்தியர்கள் தாயகம் அழைத்துவரப்படுகின்றன. கேரளாவில் இதுவரை 4 விமானங்கள் மூலம் கேரள மக்கள் அழைத்துவரப்பட்டுள்ளனர்.
இதுபோலவே வெவ்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமானோர் பல மாநிலங்களுக்கு அழைத்து வரப்படுகின்றனர். இந்தநிலையில் மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 177 இந்தியர்கள் விமானம் மூலம் திருச்சி அழைத்து வரப்படுகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த இவர்கள் அனைவரும் விமானத்தில் புறப்பட்டுள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
10 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago
உலகம்
9 days ago
உலகம்
9 days ago
உலகம்
9 days ago