தென்கொரியாவில் புதிதாக 18 பேருக்கு கரோனா தொற்று

By செய்திப்பிரிவு

தென்கொரியாவில் கரோனா தொற்று புதிதாக 18 பேருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 12 பேர் சியோலைச் சேர்ந்தவர்கள். பாதிக்கப்பட்டவர்களுக்கு யார் மூலம் கரோனா தொற்று ஏற்பட்டது என்பது குறித்து விரைவில் கண்டறிப்படும் என்று தென்கொரிய சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சியோலில் உள்ள இரவு விடுதிக்கு வந்த 29 வயது இளைஞரால் 15 பேருக்கு கரோனா வைரஸ் பரவி இருப்பதாக தென்கொரிய நோய்த் தடுப்பு மையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து தென்கொரியாவில் ஒருமாத காலத்திற்கு மதுபான விடுதிகள், இரவு விடுதிகளை மூடுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக, தென்கொரியாவில் ஏப்ரல் மாதம் முதலே கரோனா தொற்று எண்ணிக்கை ஒற்றை இலக்கத்தில் இருந்ததைத் தொடர்ந்து, ஏப்ரல் 20 முதல் பொதுமுடக்கத்தில் சில முக்கியத் தளர்வுகளைத் தென்கொரிய அரசு அமல்படுத்தியது.

இதன்படி பார்கள், நைட் கிளப்புகள், உள்ளரங்கு விளையாட்டுகள், தனியார் கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்பட்டது. ஆரம்பப் பள்ளிகள் முதல் மேல்நிலைப் பள்ளிகள் வரை அனைத்துப் பள்ளிகளையும் திறப்பதற்கான நடவடிக்கைகளிலும் தென்கொரிய அரசு இறங்கியது.

தென்கொரியாவில் 10,840 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 256 பேர் பலியாகியுள்ளனர். 9,568 பேர் குணமடைந்துள்ளனர்,

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

உலகம்

3 hours ago

உலகம்

8 hours ago

உலகம்

10 hours ago

உலகம்

11 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

மேலும்