ஆப்பிரிக்க நாடுகளில் கரோனாவால்  2 லட்சம் பேர் உயிரிழக்க வாய்ப்பு: உலக சுகாதார அமைப்பு

By செய்திப்பிரிவு

ஆப்பிரிக்க நாடுகளில் கரோனாவால் 2 லட்சம் பேர் உயிரிழக்ககூடும் என்று உலக சுகாதார அமைப்புத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் ஆப்பிரிக்கப் பகுதிக்கான தலைவர் மாட்சிடிசோ மொய்ட்டி “ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஆப்பிரிக்க நாடுகளில் கரோனா தொற்றும், உயிரிழப்பும் குறைவாக உள்ளது. பிற நாடுகளிலிருந்து ஆப்பிரிக்க நாடுகள் வேறுபடுகின்றன. ஆப்பிரிக்காவில் கரோனா தொற்று மிதமான வேகத்தில் பரவி வருகிறது.

பரவலைக் கட்டுப்படுத்தாவிட்டல் உயிர் இழப்பு மிக அதிகமாக இருக்கும். கரோனாவை கட்டுப்படுத்துவதில் அந்நாடுகள் கவனம் செலுத்தாவிட்டால், முதல் ஓராண்டில் மட்டும் 1,90,000 பேர் உயிரிழக்கக் நேரிடும். அடுத்த சில ஆண்டுகளுக்கும் கரோனா பாதிப்புத் தொடரும்” என்று தெரிவித்துள்ளார்.

எகிப்து, லிபியா, துனிசியா, மொராக்கோ, சூடான், சோமாலியா, எரித்திரியா, ஜிபூட்டி ஆகிய ஆப்பிரக்க நாடுகளைத் தவிரித்து 47 ஆப்பிரிக்க நாடுகளைக் கணக்கில் கொண்டு கரோனா பரவல் தொடர்பாக ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதில், ஆப்பிரிக்க நாடுகளில் இந்த ஓராண்டில் மட்டும் 2.9 கோடி முதல் 4.4 கோடி பேர் கரோனா தொற்றுக்கு உள்ளாவார்கள் என்றும் அதில் 83,000 முதல் 1,90,000 பேர் உயிரிழக்ககூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேற்கு ஐரோப்பிய நாடுகளில் கரோனாவால் 1.4 லட்சம் பேர் அளவில் உயிரிழந்துள்ள நிலையில், ஆப்ரிக்காவில் கரோனா இறப்பு எண்ணிக்கை 2,000 அளவிலே பதிவாகியிருக்கிறது. அதிகபட்ச அளவாக தென் ஆப்பிரிக்காவில் 8,232 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 161 பேர் இறந்துள்ளனர்.

நைஜிரியாவில் 3,526 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 107 பேர் இறந்துள்ளனர்.இந்நாடுகள் ஊரடங்கைத் தளர்த்தத் தொடங்கியுள்ளன. இந்தச் சூழலில் உலக சுகாதார அமைப்பின் எச்சரிக்கை வந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

7 mins ago

உலகம்

1 hour ago

உலகம்

12 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

18 hours ago

உலகம்

19 hours ago

உலகம்

21 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

மேலும்