வடகொரிய அதிபர் கிம்முக்கு இருதய அறுவை கிசிச்சை நடந்ததற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை என்று தென்கொரிய உளவு அமைப்பு தெரிவித்துள்ளது.
வட கொரியா அதிபர் கிம் ஜாங் சமீபகாலமாக வெளிஉலகிற்கு வரவில்லை. வடகொரியாவின் தந்தை எனப்படும் கிம் இல் சங்-ன் பிறந்த தின கொண்டாட்டத்தில் அதிபர் கிம் ஜாங் உன் பங்கேற்கவில்லை. கடந்த ஏப்ரல் 15-ம் தேதி நடைபெற்ற தனது தாத்தாவின் பிறந்தநாள் விழாவில் அதிபர் கிம் ஜாங் உன் கலந்து கொள்ளாதது சந்தேகங்களை எழுப்பியது. கடந்த 2011-ம்ஆண்டு அதிபராக வந்தபின் முதல்முறையாக இந்த நிகழ்ச்சியை கிம் தவிர்த்தார்.
இந்த நிலையில் கிம்முக்கு சமீபத்தில் அவருக்கு நடந்த இருதய அறுவை சிகிச்சைக்குப் பின்னர் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக சி.என்.என் செய்தி வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து கிம்மின் உடல் நிலை குறித்து பல்வேறு வதந்திகள் பரவியது.
» பாகிஸ்தானில் கரோனாவுக்கு ஒரே நாளில் அதிகபட்ச மரணம்
» தேர்தலை நடத்த அவசரகதியில் ஊரடங்குக்கு விடைகொடுக்கும் இலங்கை: அச்சத்தில் வணிக நிறுவனங்கள்
பின்னர் இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப் புள்ளி வைக்கும் நோக்கில் கடந்த வாரம் கிம் பொது நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
இந்த நிலையில் கிம்முக்கு இருதய சிகிச்சை செய்யப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்று வடகொரியாவின் அண்டை நாடான தென்கொரிய உளவு அமைப்பு தற்போது தெரிவித்துள்ளது.
இதுகுறித்து தென்கொரிய உளவு அமைப்பு கூறும்போது, “வடகொரிய அதிபர் கிம்முக்கு எந்த இருதய அறுவை சிகிச்சையும் செய்யவில்லை. அவர் பொது இடங்களில் பங்கேற்காத நாட்களிலும் தொடர்ந்து அரசு பணி செய்து வந்திருக்கிறார். எங்களுக்கு தெரிந்தவரை அவருக்கு இருதய அறுவை சிகிச்சை நடக்கவில்லை” என்று தெரிவித்துள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
22 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago