கரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட லாக்டவுனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கி இருக்கும் இந்தியர்களை அழைத்துவரும் பணியை வரும் 7-ம் தேதி மத்திய அரசு தொடங்குகிறது.
முதல் கட்டமாக இரு ஏர் இந்தியா விமானங்கள் சென்று அங்கு சிக்கியிருக்கும் இந்தியர்களை அழைத்து வருகின்றன. இந்த இரு விமானங்களும் கேரள மக்களுக்காக இயக்கப்படுகிறது என்று ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்தியத் தூதர் பவன் கபூர் தெரிவித்தார்.
இதுகுறித்து ஐக்கிய அரபு அமீரகத்துக்கான இந்தியத் தூதர் பவன் கபூர் கல்ப் நியூஸுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறுகையில், “ஐக்கிய அரபு அமீரகத்தில் சிக்கியுள்ள இந்தியர்கள் 7-ம் தேதி முதல் ஏர் இந்தியா விமானம் மூலம் தாயகம் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதற்காக முதலில் இரு விமானங்களும் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
ஒரு விமானம் அபுதாபியிலிருந்து கொச்சிக்கும், மற்றொரு விமானம் துபாயிலிருந்து கோழிக்கோட்டுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. இந்த விமானத்தில் அமீரகத்தில் வேலையிழந்து தவிக்கும் இந்தியர்கள், மருத்துவ வசதி உடனடியாகத் தேவைப்படுவோர், முதியோர், கர்ப்பணிப் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.
» மதுவாங்க சமூகவிலகல் இன்றி கூடிய கூட்டம்: கட்டுப்படுத்த முடியாமல் திணறல்: வைரலாகும் வீடியோ
கடந்த சில நாட்களாக ஆன்லைனில் பதிவு செய்தவர்கள் பட்டியல் பிரிக்கப்பட்டு, வகைப்படுத்தப்பட்டு தேர்வு செய்யப்படுகின்றனர். 7-ம் தேதி முதல் நாள்தோறும் விமானங்கள் இயக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
இதற்கிடையே மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “கப்பற்படையின் ஐஎன்எஸ் ஷர்துல் துபாய்க்கு இந்தியர்களை மீட்கச் சென்றுள்ளது. அங்கிருந்து இந்தியர்களை அழைத்துக்கொண்டு கொச்சி வந்தடையும்” எனத் தெரிவித்தார்.
இந்த விமானப் பயணத்தில் பயணிக்கும் அனைத்து இந்தியர்களும் விமானக் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் தாயகம் திரும்பியதும் 14 நாட்கள் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். அதற்கான மருத்துவச் செலவுகளையும் அவர்களே ஏற்க வேண்டும். ஆனால், டிக்கெட் கட்டணம் என்னவென்று இதுவரை மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சகம் இதுவரை தெரிவிக்கவில்லை.
ஆனால், டிக்கெட் கட்டணம் சராசரியாகத்தான் இருக்கும், அனைவரும் செலுத்தும் வகையிலான கட்டணமாகத்தான் இருக்கும். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள விரைவில் டிக்கெட் கட்டணத்தை அங்குள்ள இந்தியர்களுக்குத் தெரிவிக்கும். விமானத்தில் பயணிக்கத் தேர்வு செய்யப்பட்டவர்களுக்குத் தனிப்பட்ட முறையில் செல்போன் மூலம் கட்டண விவரங்கள் தெரிவிக்கப்படும்.
முக்கிய செய்திகள்
உலகம்
12 hours ago
உலகம்
18 hours ago
உலகம்
20 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago