இரண்டாம் உலகப் போரில் நாஜி ஜெர்மனியைத் தோற்கடித்த 75-வது ஆண்டு வெற்றியைக் கொண்டாடும் வகையில் வடகொரியாவில் ரஷ்ய வீரர்கள் கொல்லப்பட்ட நினைவிடத்தைப் பாதுகாத்து வருவதற்காக வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் விருது வழங்கினார்.
வடகொரியாவின் தலைநகர் யாங்யாங் நகரில் உள்ள ரஷ்யத் தூதரகத்தில் நடந்த நிகழ்ச்சியில் வடகொரியாவுக்கான ரஷ்யத் தூதர் அலெக்சாண்டர் மட்ஸ்கோரா இந்த விருதை வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் ரி சன் வான்னுக்கு இன்று வழங்கினார்.
இந்த விருதைப் பெற அதிபர் கிம் ஜாங் வருவதாக முன்பு தெரிவிக்கப்பட்ட நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக அவர் வரவில்லை
இந்த விருது வழங்கும் நிகழ்ச்சியில் ரஷ்யத் தூதர் அலெக்சாண்டர் மட்ஸ்கோராவும், வடகொரிய வெளியுறவுத்துறை அமைச்சர் ரி சன் வான் ஆகியோர் கரோனா வைரஸ் காரணமாக முகக்கவசம் அணிந்திருந்தனர்.
கடந்த 1941- முதல் 1945-ம் ஆண்டு வரை நடந்த “கிரேட் பேர்டியாட்டிக் வார்” எனும் போரில் அடைந்த வெற்றியின் 75-வது நினைவாக இந்த விருது வடகொரிய அதிபருக்கு வழங்கப்பட்டது. இந்தப் போரில் அடைந்த வெற்றியின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் மே 9-ம் தேதி மாஸ்கோவில் செஞ்சதுக்கத்தில் மிகப்பெரிய ராணுவ அணிவகுப்பை ரஷ்ய அரசு நடத்தும். ஆனால், கரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு அணிவகுப்பை ஒத்திவைத்து அதிபர் புதின் உத்தரவிட்டார்.
“கிரேட் பேர்டியாட்டிக் வார்” என்ற போரின்போது, வடகொரியாவில் 1,375 சோவியத் வீரர்கள் கொல்லப்பட்டனர். அவர்கள் நினைவிடம் டிபிஆர்கே எனும் நினைவிடத்தில் எழுப்பப்பட்டுள்ளது. சோவியத் வீரர்கள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் புதைக்கப்பட்ட அந்த நினைவிடத்தை இன்னும் வடகொரியா பாதுகாத்துப் பராமரித்து வருகிறது. அந்தச் செயலைப் பாராட்டும் விதமாக வடகொரிய அதிபர் கிம்முக்கு விருது வழங்கப்பட்டது.
கடந்த 2015-ம் ஆண்டு ரஷ்யாவுக்கு செஞ்சதுக்கத்தில் நடந்த அணிவகுப்பை காண வடகொரிய அதிபர் கிம் செல்வதாக இருந்தது. ஆனால், கடைசி நேரத்தில் ரஷ்யாவில் நடந்த உள்நாட்டுக் குழப்பத்தால் அந்தப் பயணத்தை அவர் ரத்து செய்தார்
முக்கிய செய்திகள்
உலகம்
12 hours ago
உலகம்
18 hours ago
உலகம்
20 hours ago
உலகம்
22 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago