சிங்கப்பூரிலுள்ள இந்தியர்களில் 4,800 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக இந்திய உயர் ஆணையம் தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் மக்களைவிட அங்குள்ள தொழிலாளர்கள் விடுதிகளில் தங்கியிருக்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு அதிக அளவில் கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. தற்போது பாதிக்கப்பட்டுள்ள 4,800 இந்தியர்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் வெளிநாட்டுத் தொழிலாளர் விடுதிகளில் தங்கியிருந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிங்கப்பூரில் படித்துக் கொண்டிருக்கும் 3,500 இந்தியர்கள் தாயகம் திரும்ப விண்ணப்பித்துள்ளனர்.
தெற்காசிய நாடுகளிலிருந்து மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிங்கப்பூரில் வேலை செய்து வருகின்றனர். இவர்கள் அங்குள்ள தொழிலாளர் விடுதிகளில் தங்கி வேலை செய்து வருகின்றனர். மிக நெருக்கமாகக் கட்டப்பட்டு இருக்கும் முறையான சுகாதார வசதியற்ற அத்தகைய விடுதிகளிலேயே தற்போது அதிக அளவில் கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது. கடந்த மாதம் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் இத்தகைய விடுதிகளில் தங்கி இருந்தவர்கள்.
» உடல்நிலை சரியில்லாத குட்டியைக் கவ்வியபடி மருத்துவமனைக்கு வந்த தாய்ப்பூனை; வைரல் புகைப்படம்
விடுதிகளில் தங்காமல், வேறு இடங்களில் தங்கும் தொழிலாளர்கள் இடையே கரோனா பரவல் குறைவாக உள்ளது. முந்தைய வாரங்களில் நாளொன்றுக்கு, வேறு இடங்களில் தங்கும் தொழிலாளர்களில் 25 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 14 ஆகக் குறைந்துள்ளது.
சிங்கப்பூரில் கரோனா தொடர்பாக இரு இந்தியர்கள் இறந்துள்ளனர். ஒருவர் இதயப் பிரச்சினை காரணமாக இறந்துள்ளார். ஆனால், அவருக்கு கரனோ தொற்று இருந்தது இறப்புக்குப் பிறகே தெரியவந்தது. மற்றொருவர் கரோனா சிகிச்சையின்போது மருத்துவமனையிலேயே தற்கொலை செய்துகொண்டார்.
சிங்கப்பூரில் 18,205 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் 18 பேர் பலியாகியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
3 hours ago
உலகம்
6 hours ago
உலகம்
7 hours ago
உலகம்
8 hours ago
உலகம்
8 hours ago
உலகம்
9 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago