உலகம் முழுவதும் கரோனா தொற்றுக்கு 35 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு; அதிகம் பரவிய முதல் 5 நாடுகள்

By செய்திப்பிரிவு

உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 35 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஜான் ஹாப்கின்ஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ஜான் ஹாப்கின்ஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறும்போது, “கடந்த டிசம்பர் மாதம் முதல் பரவத் தொடங்கிய கரோனா வைரஸால் தற்போது உலகம் முழுவதும் 36,07,053 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இரண்டு லட்சத்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர். 11,54,549 பேர் குணமடைந்துள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் ஹூபே மாகாணத்திலிருந்து பரவத் தொடங்கிய கரோனா வைரஸுக்கு அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

ஐரோப்பிய நாடுகளை ஒப்பிடும்போது ஆசிய நாடுகளில் தொற்று குறைவாகவே காணப்படுகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் கரோனா தொற்று ஆரம்பக் கட்டத்தில் உள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள முதல் ஐந்து நாடுகளின் விவரம்:

கரோனா தொற்றில் அமெரிக்கா முதலிடம் வகிக்கிறது. அமெரிக்காவில் கரோனா தொற்றுக்கு 11,88,421 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 68,602 பேர் பலியாகி உள்ளனர்.1,78,594 பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்காவுக்கு அடுத்து ஸ்பெயினில் கரோனா தொற்றால் 2,47,122 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 25,264 பலியாகி உள்ளனர். 1,48,558 பேர் குணமடைந்துள்ளனர்.

இத்தாலியில் கரோனா தொற்றால் 2,10,717 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28,884 பலியாகி உள்ளனர். 81,654 பேர் குணமடைந்துள்ளனர்.

யுகேவில் கரோனா தொற்றால் 1,86,599 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28,446 பேர் பலியாகி உள்ளனர். 30 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் குணமாகி உள்ளனர்.

பிரான்ஸில் 1,68,693 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கரோனா தொற்றால் 24,895 பேர் பலியாகி உள்ளனர். 50,784 பேர் குண்மடைந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

12 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

உலகம்

10 days ago

மேலும்