ஈரானில் கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருவதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஈரான் அரசுத் தரப்பில், ”ஈரானில் கடந்த 24 மணிநேரத்தில் 802 பேருக்குக் கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஈரானில் கடந்த சில நாட்களாக கரோனா தொற்று படிப்படியாகக் குறைந்து வருகிறது. ஈரானில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 95,646 பேரில் 76,318 பேர் குணமடைந்துள்ளனர்.
கரோனா தொற்றிலிருந்து அதிகம் பேர் குணமடைந்த நாடுகளில் ஈரானும் ஒன்று” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ஈரானில் ஊரடங்கை முழுமையாகத் தளர்த்தினால் கரோனா தொற்று மீண்டும் ஏற்படலாம் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
» சிங்கப்பூர் சாங்கி விமான நிலையத்தின் இரண்டாவது முனையம் 18 மாதங்களுக்கு மூடல்
» நியூயார்க்கில் நடப்புக் கல்வியாண்டு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் இயங்காது
மத்தியக் கிழக்கு நாடுகளில் அமெரிக்காவின் பொருளாதாரத் தடையால் பெரும் சரிவை எதிர்கொண்டுள்ள ஈரான், கரோனா வைரஸ் தொற்று காரணமாக கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கரோனா தொற்றை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகள் கரோனா தொற்றால் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்றால் 34,01,231 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 2,39,604 பேர் பலியாகியுள்ளனர். 10 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago
உலகம்
8 days ago
உலகம்
8 days ago
உலகம்
10 days ago