சிங்கப்பூரில் இரு வாரங்களுக்குப் பிறகு கரோனா தொற்று குறைவு

By செய்திப்பிரிவு

இரு வாரங்களுக்குப் பிறகு சிங்கப்பூரில் ஒரு நாளில் குறைவான எண்ணிக்கையில் கரோனா தொற்று பதிவாகியுள்ளது.

இதுகுறித்து சிங்கப்பூர் சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், ''சிங்கப்பூரில் கடந்த 24 மணிநேரத்தில் 447 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. நோய்த்தொற்று ஏற்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ஆவர். இதனைத் தொடர்ந்து சிங்கப்பூரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 17,548 ஆக அதிகரித்துள்ளது. மேலும், கரோனா தொற்றுக்கு 17 பேர் பலியாகினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசிய நாடுகளிலிருந்து மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட குறைந்த ஊதியத் தொழிலாளர்கள் சிங்கப்பூரில் வேலை செய்து வருகின்றனர். பெரும்பாலும் கட்டுமானம் மற்றும் உணவு விடுதிகளில் குறைந்த ஊதிய வேலைகளைச் செய்து வருகின்றனர்.

இத்தகைய ஊழியர்கள் மிக நெருக்கடியான தங்கும் விடுதிகளில் கூட்டமாக வசித்து வருகின்றனர். போதிய சுகாதார வசதியின்மையால் அவர்களிடையே கரோனா தொற்று அதிகமாக உள்ளது.

வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தங்கும் விடுதிகளில் நோய்த் தொற்றைத் தடுக்கும் அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக சிங்கப்பூர் பிரதமர் லீ ஹ்சியன் லூங் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.

சிங்கப்பூரில் ஜூன் 1 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

6 hours ago

உலகம்

10 hours ago

உலகம்

10 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்