ஊரடங்கைத் தளர்த்த முடிவு; இத்தாலியில் கரோனா தொற்று 2,07,428 ஆக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

ஊரடங்கை மெல்லத் தளர்த்த முடிவு எடுக்கப்பட்ட நிலையில் இத்தாலியில் கரோனா வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை 2,07,428 ஆக அதிகரித்துள்ளது.

மார்ச் மாதத் தொடக்கத்தில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மார்ச் 9-ல் நாடு முழுவதும் பொது ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தார் இத்தாலி பிரதமர் ஜிசப்பே கான்டே.

இந்தச் சூழலில், கரோனா பாதிப்பு உச்சத்தை இத்தாலி அடைந்துவிட்டது என்று மார்ச் 31-ல் தேசிய சுகாதார நிறுவனத்தின் தலைவர் சில்வியோ ப்ரஸஃபெர்ரோ அறிவித்தார். பொதுமுடக்கம் அமலுக்கு வந்த மூன்றாவது வாரத்திலிருந்து, தொற்றுக்குள்ளாவோரின் தினசரி விகிதமும், மரணங்களும் மெல்ல மெல்ல குறையத் தொடங்கின.

இதனைத் தொடர்ந்து படிப்படியாக பொதுமுடக்கத்தைத் தளர்த்துவதற்கான திட்டங்களை இத்தாலி பிரதமர் ஜிசப்பே கான்டே உருவாக்கினார். இதன்படி மே 4-ம் தேதி முதல் இத்தாலியில் பொதுமுடக்கம் மெல்ல மெல்ல நீக்கப்படவிருக்கிறது. ஜூன் மாதம் முதல் இத்தாலியில் இயல்பு நிலை திரும்பும் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

இந்த நிலையில் இத்தாலியில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,07,428 ஆக அதிகரித்துள்ளது.

இதுகுறித்து இத்தாலி நோய்த் தடுப்பு மையம் கூறும்போது, “இத்தாலியில் கடந்த 24 மணிநேரத்தில் 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,07,428 ஆக அதிகரித்துள்ளது. 78,249 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 hours ago

உலகம்

7 hours ago

உலகம்

7 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்