சீன ஆய்வகத்திலிருந்து வந்ததுதான் கரோனா வைரஸ்; எங்களுக்கான இழப்புகளை  வேறு வழியில் ஈடுசெய்வோம்: அதிபர் ட்ரம்ப் சூசகம்

By பிடிஐ


சீன ஆய்வகத்திலிருந்து உருவாக்கப்பட்டு வந்ததுதான் கரோனா வைரஸ். எங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு நாங்கள் வேறு வழியில் ஈடு செய்வோம் என்று அதிபர் ட்ரம்ப் சூசகமாகத் தெரிவித்தார்.

சீனாவுக்கு எதிராக விரைவில் அமெரிக்கா புதிய வரிகளை விதிக்க தயாராகி வருவதை சூசகமாக சுட்டிக்காட்டி அதிபர் ட்ரம்ப் பேசியுள்ளார்.

சீனாவின் வூஹான் நகரில் உருவான கரோனா வைரஸ் அந்நாட்டில் ஏற்படுத்திய பாதிப்பைக் காட்டிலும் அமெரிக்காவிலும், ஐரோப்பிய நாடுகளிலும்தான் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. அமெரிக்காவில் இதுவரை ஏறக்குறைய 11 லட்சம் மக்கள் கரோனாவால் பாதி்க்கப்பட்டுள்ளனர், 63 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

சீனாவின் வூஹான் சந்தையிலிருந்து பறவைகள் மூலம் கரோனா வைரஸ் பரவியதாக முதலில் கூறப்பட்ட நிலையில் ஃபாக்ஸ் சேனல், தி நியூயார்ஸ் டைம்ஸ் நாளேடு கரோனா வைரஸ் சீன ஆய்வகங்களிலிருந்து கவனக்குறைவாகக் கையாண்டதால் பரவியதாக செய்தி வெளியிட்டன. இந்த செய்திக்குப்பின் அதிபர் ட்ரம்ப் சீனாவுக்கு எதிராக நாள்தோறும் காட்டமான அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார்.

அமெரி்க்காவுக்கு ஏற்பட்ட பாதிப்புக்கும், உலகிற்கு ஏற்பட்ட பாதிப்புக்கும் சீனாதான் பொறுப்பேற்க வேண்டும் என அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். அமெரிக்க உளவுத்துறையும் இதுதொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகவும் அதிபர் ட்ரம்ப் தெரிவி்த்துள்ளார். இதற்கிடையே அதிபர் ட்ரம்ப் குரலுக்கு வலு சேர்க்கும் விதமாக பிரிட்டன், ஜெர்மனி, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளும் கரோனா வைரஸ் பரவியதற்கு சீனாதான் பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் அதிபர் ட்ரம்ப் நேற்று ஊடகங்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

அமெரிக்காவுக்கும், உலகிற்கும் கரோனா வைரஸால் ஏற்பட்ட பாதிப்புக்கு சீனாதான் பொறுப்பேற்க வேண்டும். எங்கள் நாட்டில் நேர்ந்த உயிரிழப்புகளுக்கும், பொருளாதார இழப்புக்களுக்கும் இழப்பீடு தர வேண்டும். சீனாவுக்கு எதிராக கடனை நாங்கள் ரத்து செய்யமாட்டோம்.

அது பாதகமான பலனை எங்களுக்கு அளிக்கும். டாலரின் மதிப்பு சர்வதேச அளவில் ஊசலாட்டத்துக்கு கொண்டு செல்லும். உலகிலேயே அமெரிக்க டாலர்தான் வலிமையானது, அதை நாங்கள் பாதுகாக்க வேண்டும்.வேறு விதத்தில் சீனாவிடம் இருந்து நாங்கள் இழப்பீ்ட்டை வசூலிப்போம். சீனாவுக்கு எதிரான எங்கள் விளையாட்டை விரைவில் தொடங்குவோம் அதாவது சீனாவுக்கு எதிராக வரிவிதிப்பை அதிகப்படுத்துவோம்”எனத் தெரிவித்தார்

சீனாவின் வூஹான் ஆய்வகத்திலிருந்து கரோனா வைரஸ் பரவியதை நம்புகிறீர்களா என நிருபர்கள் கேட்டனர். அதற்கு அதிபர் ட்ரம்ப் பதில் அளிக்கையில் “ நிச்சயமாக வூஹான் ஆய்வகத்திலிருந்துதான் கரோனா வைரஸ் பரவியது என்பதை நம்புகிறேன். ஆனால் இதற்கு மேல் எந்தவிதமான தகவலையும் தெரிவிக்க முடியாது.

கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவாத வகையில் சீனாவால் நிச்சயம் தடுத்திருக்க முடியும். அவர்கள் தடுத்திருக்க வேண்டும் என்பது எனது விருப்பம், உலக நாடுகளே அதைத்தான் விரும்புகி்ன்றன. ஆனால் சீனா அதைச்செய்யவில்லை

. இதனால் அமெரிக்கா மட்டுமல்ல உலகமே சீனாவால் பாதிக்கப்பட்டு வருகிறது. இரு விஷயங்கள் இருக்கின்றன என்னைப் பொறுத்தவரை கரோனா வைரஸ் சீனாவின் கட்டுப்பாட்டை மீறிவிட்டதாக இருக்க வேண்டும், இரண்டாவதாக, விமானப் போக்குவரத்தையாவது நிறுத்தியிருக்க வேண்டும், ஆனால், அமெரிக்காவுக்கு மட்டுமல்ல உலகின் பல நாடுகளுக்குச் செல்லும் எந்த விமானத்தையும் கரோனா வைரஸ் பரவும் காலத்தில் சீனா ரத்து செய்யவில்லை, தடுத்து நிறுத்த முயலவும் இல்லை.

இதனால் ஐரோப்பிய நாடுகள் மோசமாகப் பாதிக்கப்பட்டதை பார்த்திருப்பீர்கள், இத்தாலி நிலைமை தெரியம் தானே.எங்கள் நாடு இதுவரை இதுபோன்ற உயிரிழப்புகளையும் பொருளாதார சீரழிவையும் சந்தித்தது இல்லை. உறவுகளை, நண்பர்களை இழந்து மக்கள் துக்கத்தில் இருக்கிறார்கள். உலகில் பல நாடுகள் இதே பாதிப்பை அடைந்துள்ளன. உண்மையில் என்ன நடந்தது என்பதை கண்டுபிடிப்போம்” எனத் தெரிவித்தார்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

7 mins ago

உலகம்

43 mins ago

உலகம்

6 hours ago

உலகம்

7 hours ago

உலகம்

8 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

மேலும்