சிங்கப்பூரில் கரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 15,641 ஆக அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

சிங்கப்பூரில் கடந்த 24 மணிநேரத்தில் 690 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சிங்கப்பூர் சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், ''கடந்த 24 மணிநேரத்தில் 690 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்களில் பலர் வெளிநாட்டுப் பணியாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள்.

தொற்று ஏற்பட்டவர்களில் இந்தியர்களும் அடங்குவர். சிங்கப்பூரில் கரோனா வைரஸ் தொற்று எண்ணிக்கை 15,641 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கரோனா தொற்றுக்கு அங்கு 14 பேர் பலியாகினர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்காசிய நாடுகளிலிருந்து குறைவான ஊதியம் பெறும் மூன்று லட்சத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிங்கப்பூரில் வேலை செய்து வருகின்றனர். பெரும்பாலும் கட்டுமானம் மற்றும் உணவு விடுதிகளில் அவர்கள் வேலை செய்து வருகின்றனர்.

இத்தகைய ஊழியர்கள் மிக நெருக்கடியான தங்கும் விடுதிகளில் கூட்டமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களிடத்தில் கரோனா தொற்று அதிகரித்து வருவது சிங்கப்பூர் அரசு பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

சிங்கப்பூரில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஜூன் 1 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

உலகம்

5 hours ago

உலகம்

6 hours ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

7 days ago

உலகம்

9 days ago

உலகம்

10 days ago

உலகம்

10 days ago

மேலும்