நடுவானில் விமானங்கள் மோதி விபத்து: சுலோவாகியாவில் 7 வீரர்கள் பலி

By ஏபி

சுலோவாகியாவில் பாராசூட் வீரர்களை ஏற்றிச் சென்ற விமானங்கள் நடுவானில் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 7 பேர் உயிரிழந்தனர்.

மேற்கு சுலோவாகியாவின் கார்வெனே காமென் கிராமத்தில் நேற்று (வியாழக்கிழமை) இந்த பயங்கர விபத்து ஏற்பட்டது. உள்நாட்டு நேரப்படி காலை 7:20 மணியளவில், பாராசூட் வீரர்களை ஏற்றிச் சென்ற 2 விமானங்கள் வானில் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகி வெடித்துச் சிதறி கீழே விழுந்தது. தரையிலிருந்து சுமார் 1,500 மீட்டர் உயரத்தில் இந்த விபத்து நேரிட்டது.

விபத்தின்போது, விமானத்தினுள் இருந்த வீரர்கள் சிலர் பாராசூட்டுடன் கீழே குதித்தனர். 2 விமானங்களிலும் மொத்தம் 40-க்கும் மேற்பட்டோர் இருந்தனர்.

விபத்தில் 7 பேர் உயிரிழந்ததாக சுலோவாகியா தீயணைப்புத் துறை செய்தித் தொடர்பாளர் சூசானா ஃபரோக்சவா தெரிவித்தார்.

விபத்தில் சிக்கிய 15 பேர் காணவில்லை என்றும் கூறப்படுகிறது. விமானம் விபத்துக்குள் சிக்கிய பகுதிக்கு மீட்பு குழுவினர் சென்று உள்ளனர். மீட்பு குழுவினர் ஹெலிகாப்டர் மூலம் விரைந்து வீரர்களை தேடி வருகின்றனர்.

"வீரர்கள் தங்களது பாராசூட்களை பயன்படுத்தி விமானத்திலிருந்து குதித்து பத்திரமாக தரையிறங்கினர். அவர்கள் உயிர் பிழைத்தது அதிசயமான ஒன்றுதான். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்" என்று அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

8 hours ago

உலகம்

8 hours ago

உலகம்

10 hours ago

உலகம்

12 hours ago

உலகம்

13 hours ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

மேலும்