ஸ்பெயினில் ஜூன் மாத இறுதிக்குள் நான்கு கட்டங்களாக ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட உள்ளது.
கரோனா வைரஸ் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து ஸ்பெயினில் கடைப்பிடிக்கப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஸ்பெயின் அரசு மெல்ல மெல்ல தளர்த்த முடிவு செய்துள்ளது.
ஸ்பெயினில் ஏப்ரல் மாதத் தொடக்கத்தில் 900 ஆயிரம் வரை இருந்த இறப்பு எண்ணிக்கை இந்த வாரத்தில் 301 ஆகக் குறைந்துள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு ஜூன் மாத இறுதி வரை நான்கு கட்டங்களாக ஊரடங்கு தளர்ப்பட உள்ளது. இதன் மூலம் ஸ்பெயினில் மார்ச் 14 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்ட ஊரடங்கு முறை மே 4 ஆம் தேதி முதல் தளர்த்தப்பட உள்ளது.
முதல் கட்டமாக சிகை அலங்காரக் கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள் திறக்க அனுமதி அளிக்கப்படும் என்றும் மே 11 ஆம் தேதிக்குப் பிறகு மதுபான நிறுவனங்கள் திறக்கப்படும் என்றும் ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது.
» கோவை அரசு சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்கு இணையவழி வகுப்புகள் தொடக்கம்
» நெல்லையில் தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் சோதனை
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான ஸ்பெயின் கரோனா வைரஸ் தொற்றால் கடுமையான பாதிப்புக்குள்ளாகியது.
ஸ்பெயினில் 2,32,128 பேர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 23,822 பேர் பலியாகியுள்ளனர். 1,23,903 பேர் குணமடைந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 31,39,471 பேர் பாதிக்கப்பட, 2,18,024 பலியாகிய நிலையில் 9, 59,212 குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
5 hours ago
உலகம்
11 hours ago
உலகம்
13 hours ago
உலகம்
15 hours ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
9 days ago
உலகம்
10 days ago