அமெரிக்காவில் கரோனா வைரஸால் 70,000 பேர் வரை இறக்கலாம்: ட்ரம்ப்

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் காரணமாக அமெரிக்காவில் 70,000 பேர் வரை இறக்கலாம் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 30,65,176 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 9,22,862 பேர் குணமடைந்த நிலையில் 2,11,631 பேர் பலியாகியுள்ளனர்.

இதில் அமெரிக்காவில் மட்டும் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 55 ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். இந்நிலையில் அமெரிக்காவில் கரோனா வைரஸால் பலியானோர் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ட்ரம்ப் பேசும்போது, “இந்த நாடு பல மக்களை இழந்திருக்கிறது. அமெரிக்காவில் கரோனா வைரஸுக்கு 70,000 பேர் வரை இறக்கலாம். எனினும் நாம் சிறந்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். சிறந்த முடிவுகளை எடுத்துள்ளோம். அதில் முக்கியமானது எல்லைகளை அடைத்தது. சீனாவிலிருந்து வந்தவர்களுக்குத் தடை விதித்தது” என்றார்.

மேலும், கரோனா வைரஸ் விவகாரத்தில் சீனா செய்தது எங்களுக்கு மகிழ்ச்சியைத் தரவில்லை என்றும் சீனாவுக்கு எதிரான விசாரணயைத் தீவிரப்படுத்தியுள்ளோம் என்றும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

சீனாவில் இருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று 200க்கும் மேற்பட்ட நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இவற்றில் அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

11 hours ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

உலகம்

6 days ago

மேலும்