கரோனா ஊரடங்கால் லண்டனில் குடும்ப வன்முறை அதிகரிப்பு

By செய்திப்பிரிவு

கரோனோ வைரஸ் காரணமாக மக்கள் வீடுகளில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்ட நிலையில், குடும்ப வன்முறை அதிகரித்து வருகிறது. லண்டனில் கடந்த 40 நாட்களில் மட்டும் குடும்ப வன்முறை குற்றச்சாட்டில் 4,093 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த லண்டனில் மார்ச் 9-ம் தேதி முதல் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. மக்கள் தங்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் வேலைக்குச் செல்லாமல் அனைவரும் வீட்டில் இருப்பதனால் கணவன்- மனைவிக்கிடையேயான சண்டகள் அதிகரித்துள்ளன.

மார்ச் 23-ல் இங்கிலாந்து முழு ஊரடங்கை அறிவித்தது. ஆனால், அதற்கு முந்தைய தினங்களிலேயே மக்கள் பொது இடங்களில் கூடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும், சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

பிற தினங்களில் அலுவலகம் சென்று கொண்டிருந்த நிலையில், தற்போது முழு நேரமாக வீட்டில் இருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக குடும்ப வன்முறை கடந்த 40 தினங்களில் மட்டும் 9 சதவீதம் அதிகரித்துள்ளது.

இவ்வாறு குடும்ப வன்முறையில் பாதிக்கப்படுபவர்கள் தங்களை தற்காத்துக் கொள்ளும் வகையில் வீடுகளிலிருந்து எந்த நேரம் வேண்டுமானாலும் வெளிவரலாம் என்றும், சமூக இடைவெளியைப் பின்பற்றவில்லை என்று அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாது என்று உறுதி அளிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

இங்கிலாந்தில் இதுவரையில் 1,54,037 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 20,794 பேர் உயிரிழந்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்