உலகம் முழுவதும் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,004,116 ஆக அதிகரித்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்கவில் இயங்கும் மருத்துவ பல்கலைக்கழமான ஜான் ஹாப்கின்ஸ் கூறும்போது, ”உலகம் முழுவதும் கரோனா வைரஸ்ஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,004,116 ஆக அதிகரித்துள்ளது.
. 2,07,118 பேர் பலியாகியுள்ளனர், 882,770 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.
சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் 200க்கும் அதிகமான நாடுகளில் தொற்றை ஏற்படுத்தி உள்ளது. இதில் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி , பிரான்ஸ் , ஜெர்மனி ஆகிய நாடுகளில் கடுமையான பாதிப்பை சந்தித்துள்ளன.
உலக வல்லரசான அமெரிக்காவில் கரோனா பாதிப்பு எண்ணி பார்க்க முடியாத சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. அங்கு சுமார் 9, 87,322 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 55,415 பேர் பலியாக அமெரிக்கா கரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் திணறி வருகிறது.
கரோனா பரவலை தடுக்க பெரும்பாலான நாடுகள் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளன. மேலும் பொதுமக்களை சமூக இடைவெளியை கடைப்பிடிக்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி உள்ளன.
இந்த நிலையில் கரோனா வைரஸ் நீண்ட நாள்வரை இருக்கக் கூடும் என்பதால் ஊரடங்கை தளர்த்த விரும்பும் நாடுகள் அதனால்
ஏற்படும் விளைவுகளை உணர்ந்தும் செயல்படுமாறு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி உள்ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
10 hours ago
உலகம்
20 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago
உலகம்
7 days ago