என்று தணியும் இந்த கரோனா தாக்கம்? அலறும் அமெரிக்கா: ஒரே நாளில் 2494 பேர் மரணம்: ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை. தகவல்

By செய்திப்பிரிவு

கடந்த 24 மணி நேரத்தில் அமெரிக்காவில் 2,494 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இதன் மூலம் பலி எண்ணிக்கை 53,511 ஆக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றுள்ளோர் எண்ணிக்கை 9,36,293 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவுக்கு அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தற்போது முன்னிலையில் உள்ளது.

அமெரிக்காவின் கரோனா வைரஸ் ஒருங்கிணைப்புக் குழுவில் தலைமை வகிக்கும் தொற்று நோய் மற்றும் ஒவ்வாமை நோய் நிபுணர் டாக்டர் ஃபாஸி இது தொடர்பாக கூறும்போது, “அமெரிக்கா கரோனா சோதனைகளை மேலும் இரட்டிப்பாக்குவது அவசியம்.

அமெரிக்கா வாரம் ஒன்றிற்கு 15 லட்சம் முதல் 20 லட்சம் வரை கரோனா சோதனைகள் செய்து வருகிறது. இது அடுத்த பல வாரங்களுக்கு இரட்டிப்பாக்கப்பட வேண்டும். இது ஆன்ட்டி-பாடி டெஸ்ட்டிங் அல்ல நோய்க்கணிப்புக்கான டெஸ்ட்டைக் கூறுகிறேன்.

ஆனாலும் டெஸ்ட்டிங் மட்டுமே போதாது, அது ஒரு பகுதிதான், எத்தனை டெஸ்ட்கள் தேவை என்பதில் நாம் நிலைத்து நின்று விட வேண்டாம்.

டெஸ்ட்களை அதிகரிப்பதோடு அதற்கான திறன்களையும் இரட்டிப்பாக்க வேண்டும். நாம் டெஸ்ட்டிங்கில் நன்றாக தயாராகி வருகிறோம். டெஸ்ட்டிங்கில் விரும்பத்தக்க இடத்தை நாம் இன்னும் அடையவில்லை, ஆனால் அதை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறோம்” என்றார் டாக்டர் ஃபாஸி.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 hour ago

உலகம்

1 hour ago

உலகம்

23 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்