சீனா கரோனா வைரஸ் தொடர்பாக உருவாக்கியுள்ள மூன்றாவது தடுப்பு மருந்தை இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த அனுமதி வழங்கி இருக்கிறது.
சீனா இதுவரை கரோனா வைரஸுக்கான இரண்டு தடுப்பு மருந்துகளை உருவாக்கி மனிதர்களிடையே பரிசோதித்து வந்தது. இந்நிலையில் தற்போது மூன்றாவது தடுப்பு மருந்தை இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
ஏப்ரல் 23 வரை கணக்கின்படி, மூன்றாவது தடுப்பு மருந்து முதற்கட்ட பரிசோதனையாக 96 நபர்களுக்கு செலுத்தப்பட்டிருக்கிறது. தற்போது அவர்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.
இந்நிலையில் இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி வழங்கியுள்ளது. விரைவில் மூன்றாம் கட்ட பரிசோதனையும் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ பரிசோதனை முடிந்து அத்தடுப்பு மருந்தின் மொத்த தன்மையை அறிந்து கொள்ள ஒரு வருடகாலம் பிடிக்கும் என்று கூறப்படுகிறது.
» கரோனா ஒழிப்பில் அரசியலற்ற அணுகுமுறை: ஆஸ்திரேலியா, நியூசிலாந்தின் ஆக்கபூர்வ முயற்சி
» கிருமிநாசினி குறித்த ட்ரம்ப்பின் கருத்து: கிண்டல் செய்த ஜோ பிடன்
நேற்று சீனாவில் 12 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்ப்பட்டுள்ளது. இதில் 11 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் இதுவரை 84,311 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது.
77,346 பேர் குணமாகியுள்ள நிலையில் 4,642 பேர் பலியாகி உள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
3 hours ago
உலகம்
13 hours ago
உலகம்
19 hours ago
உலகம்
19 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago
உலகம்
7 days ago