அமெரிக்காவின் நடவடிக்கையை நெருக்கமாக கண்காணித்து வருகிறோம் என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா - ஈரானுக்கு இடையே பொருளாதாரத் தடை காரணமாக மோதல் நிலவி வருகிறது. இந்த நிலையில் கரோனா வைரஸ்
தொடர்பாக அமெரிக்கா அளித்த மருத்துவ உதவிகளை ஈரான் மறுத்துவிட்டது.
மேலும் தங்கள் மீதான பொருளாதாரத் தடையை அமெரிக்கா நீக்க வேண்டும் என்று ஈரான் வலியுறுத்து வருகிறது.
இந்த நிலையில் தற்போதைய சூழல் குறித்து ஈரான் அதிபர் கத்தார் இளவரசர் ஷேக் தமீம்மிடம் தொலைபேசியில் பேசியுள்ளார்.
» கரோனா ஒழிப்பில் அரசியலற்ற அணுகுமுறை: ஆஸ்திரேலியா, நியூசிலாந்தின் ஆக்கபூர்வ முயற்சி
» கிருமிநாசினி குறித்த ட்ரம்ப்பின் கருத்து: கிண்டல் செய்த ஜோ பிடன்
இந்த உரையாடலில், அமெரிக்காவின் செயல்பாடுகளை ஈரான் நெருக்கமாக கண்காணித்து வருவதாகவும், எனினும் பிராந்தியத்தில் நாங்கள் மோதலை ஆரம்பிக்க மாட்டோம் என்று ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முன்னதாக சில நாட்களுக்கு முன்னர் சர்வதேச விதிகளை மீறும் ஈரானின் போர் கப்பல்களை அழிக்குமாறு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கரோனா தொற்று 89,328 ஆக அதிகரிப்பு
ஈரானில் கரோனா தொற்று 89,328 ஆக அதிகரித்துள்ளது. 5,650 பேர் பலியாகி உள்ளனர். 60 ஆயிரத்துக்கு அதிகமானவர்கள்
குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
8 hours ago
உலகம்
11 hours ago
உலகம்
12 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
4 days ago