இலங்கையில் கரோனா வைரஸின் தாக்கம் குறைந்துவருவதையடுத்து நாடுமுழுவதும் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை வரும் 27-ம் தேதி முதல் விலக்கிக்கொள்ள அந்நாட்டு அ ரசு முடிவு செய்துள்ளது
உலகில் பெரும்பாலான நாடுகள் கரோனா வைரஸின் தாக்கத்துக்கு ஆளாகியுள்ளன. இதில் இலங்கையும் தப்பவில்லை இலங்கையில் இதுவரை கரோனாவால் 400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர் 17 பேர் உயிரிழந்துள்ளனர். . அதிகபட்சமாக இன்று ஒரே நாளில் 49 பேர் பாதிக்கப்பட்டனர்.
ஆனால் பரவத் தொடங்கியபோதே அதாவது மார்ச் 20-ம் தேதி முதல் அங்கு நாடுமுழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் கரோனாவின் தாக்கம் குறைந்து மக்கள் அதிகமாகப் பாதிக்கப்படவில்லை. இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டபோதிலும் 100-க்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். இதனால் லாக்டவுன் முடிவை தளர்த்தும் முடிவில் இலங்கை அரசு இருந்தது.
கடந்த சில நாட்களுக்குமுன் இலங்கை கடற்படைக்கு சொந்தமான பகுதியில் 30 பேருக்கு கரோனா தொற்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் லாக்டவுனை தளர்த்தும் முடிவை கைவிட்டு வரும் 27-ம் தேதிவரை நீட்டித்தது.
இதனால், கரோனா பரவல் மீண்டும் கட்டுக்குள் வந்து அங்கு படிப்படியாக கரோனா வைரஸின் தாக்கம் குறைந்து வருகிறது. இதன் காரணமாக நாடுமுழுவதும் அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவை வரும் 27-ம் தேதி விலக்கிக்கொள்ள அந்நாட்டு போலீஸார் திட்டமிட்டுள்ளனர்.
இதுதொடர்பாக இலங்கை போலீஸார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் “ இலங்கையில் கரோனா வைரஸின் தாக்கம் குறைந்துள்ளதால், நாடுமுழுவதும் பிறப்பிக்கப்பட்டிருந்த ஊரடங்குஉத்தரவு வரும் 27-ம் தேதி காலை 5 மணிக்கு விலக்கிக்கொள்ளப்படும்” எனத் தெரிவித்துள்ளனர்.
ஆனால் மீண்டும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்படுமா என்பது குறித்து எந்தவிதமான தகவலும் இல்லை. ஆனால் ஒரு வார இடைவெளிக்கு பின் அடுத்த வார இறுதியில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என அங்குள்ள ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago