ஆப்பிரிக்க நாடுகளில் மெல்லப் பரவும் கரோனா

By செய்திப்பிரிவு

உலக நாடுகளில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வரும் கரோனா தொற்று தற்போது ஆப்பிரிக்க நாடுகளிலும் கணிசமாகப் பரவத் தொடங்கியுள்ளது.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 28,33,011 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,97,351 பேர் பலியாகியுள்ளனர். 7 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

வளர்ந்த நாடுகள் என்று அறியப்படும் அமெரிக்கா, ஸ்பெயின், இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் கரோனா தொற்றால் கடுமையான பாதிப்பைச் சந்தித்துள்ளன.

அமெரிக்காவில் மட்டும் கரோனா தொற்றுக்கு 50,919 பேர் உயிரிழந்துள்ளனர். 9 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பலியாகியுள்ளனர். இந்த நிலையில் ஆப்பிரிக்க நாடுகளிலும் கரோனா தொற்று பரவத் தொடங்கியுள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவில் இயங்கும் ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக்கழகம் வெளியிட்ட தகவலில், “ஆப்பிரிக்க நாடுகளில் கரோனா பரவத் தொடங்கியுள்ளது. நைஜீரியாவில் 981 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 31 பேர் பலியாகியுள்ளனர்.

தென் ஆப்பிரிக்காவில் 4,220 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 79 பேர் பலியாகியுள்ளனர். கானாவில் 1,279 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் பலியாகியுள்ளனர். கென்யாவில் 365 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 14 பேர் பலியாகியுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆப்பிரிக்க நாடுகளில் கரோனா தொற்று பரவல் மிகுந்த கவலையை ஏற்படுத்தி இருப்பதாகவும், அங்கு தொற்று அதிகரித்தால் அதனைச் சமாளிக்க போதிய மருத்துவ உபகரணங்கள் இல்லை என்றும் ஐ.நா.கவலை தெரிவித்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

3 days ago

மேலும்