அமெரிக்காவில் கரோனா தொற்றால் 50,919 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகம் முழுவதையும் உலுக்கி வரும் கரோனா வைரஸ் அமெரிக்காவிலும் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் பரவியவர்கள் மற்றும் பலி எண்ணிக்கையில் உலக அளவில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவில் நியூயார்க் நகரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.
கரோனா வைரஸ் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா சிகிச்சை, ஆய்வு ஆகியவற்றுக்காக இதுவரை 7 பில்லியன் டாலர்களை செலவழித்துள்ளதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் அதிபர் ட்ரம்ப் திணறி வருகிறார். இந்த நிலையில் மாகாண ஆளுநர்கள் செயல்பட சிறப்பாக செயல்பட ட்ரம்பின் செயல்பாடு போதுமானதாக இல்லை என்று கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.
அமெரிக்காவில் தற்போதைய நிலவரப்படி 8 லட்சத்து 86 ஆயிரத்து 500க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பரவியுள்ளது. வைரஸ் பரவியவர்களில் இதுவரை 85 ஆயிரத்து 922 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் கரோனா தொற்றால் 50,919 பேர் உயிரிழந்துள்ளனர்.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago