ஜப்பானில் கரோனா வைரஸ் பாதிப்பு 13,192 ஆக அதிகரிப்பு: விமர்சனத்துக்கு உள்ளாகும் பிரதமர்

By செய்திப்பிரிவு

ஜப்பானில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 13,192 ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில் டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களும் அடங்குவர்.

இதுகுறித்து ஜப்பான் சுகாதாரத் துறை அதிகாரிகள் தரப்பில், “ஜப்பானில் கரோனா வைரஸ் தொற்றினால் இதுவரை 13,192 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 700க்கும் மேற்பட்டவர்கள் டைமண்ட் பிரின்சஸ் கப்பலில் பயணம் செய்தவர்கள்.

மேலும், கரோனா தொற்று காரணமாக 341 பேர் பலியாகியுள்ளனர். 263 பேர் ஆபத்தான நிலையில் உள்ளனர். 3,000க்கும் அதிகமானவர்கள் குணமாகியுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

இந்த நிலையில் ஜப்பானில் கரோனா பரவலை பிரதமர் ஹின்சே அபே திறமையாகக் கையாளவில்லை என்று கடும் விமர்சனங்கள் எழத் தொடங்கியுள்ளன.

சீனாவின் வூஹான் நகரிலிருந்து பரவிய கரோனா வைரஸ் தொற்று 200க்கும் அதிகமான நாடுகளில் பரவியுள்ளது. இதனால் அமெரிக்கா, சீனா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் ஆகிய நாடுகள் கடுமையான பாதிப்பை அடைந்துள்ளன.

உலகம் முழுவதும் கரோனா வைரஸால் 27, 25,920 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,19,718 பேர் கரோனா தொற்றுக்குப் பலியாகியுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

29 mins ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

5 days ago

உலகம்

7 days ago

உலகம்

8 days ago

மேலும்