அதிவேக அலைக்கற்றையை வெளியிடும் 5-ஜி செல்போன் டவர்கள் காரணமாக கரோனா வைரஸ் தொற்று அதிகமாக பரவுவ தாக வெளியான தகவல் முற்றிலும் தவறு என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. தொழில்நுட்ப ரீதியில் அது நிரூபிக்கப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கரோனா வைரஸ் தொற்று நான்கு மாதங் களுக்கு முன்பு பரவத் தொடங்கி யது. ஆனால் சில ஐரோப்பிய நாடுகளில் செல்போன் டவர்கள் தகர்க்கப்பட்டன. வைரஸ் பரவலுக்கு 5-ஜி தொழில்நுட்பம் காரணம் என்ற புரளி வெளியானது தான் இதற்குக் காரணம். அயர் லாந்து, சைப்ரஸ், பெல்ஜியம் உள் ளிட்ட நாடுகளில் அதிக அளவில் இந்த புரளி பரவி செல்போன் சார்ந்த தொழில்நுட்பக் கட்டமைப்புகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.
இங்கிலாந்தில் 12-க்கும் மேலான செல்போன் டவர்கள் சேதப்படுத்தப்பட்டதோடு தொழில் நுட்ப வல்லுநர்களும் கடும் விமர் சனத்துக்கு உள்ளாகி உள்ளனர். அவர்கள் மீது தாக்குதல் நடந்த தாகவும் செய்திகள் வெளியாயின.
இது தொடர்பாக சர்வதேச தொழில்நுட்ப கழகத்தின் (ஐடியு) செய்தித் தொடர்பாளர் மோனிகா கெஹ்னர் கருத்து தெரிவிக்கை யில், ‘‘கோவிட்-19 பரவலுக்கும், 5-ஜி தொழில்நுட்பத்துக்கும் சம் பந்தமில்லை. ரேடியோ அலைவரி சைக்கும் கரோனா வைரஸ் பரவலுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது. இவ்விதம் தவறான தகவல் பரப்புவது வெட்ககரமான செயல்’’ என்று தெரிவித்துள்ளார்.
4-ஜி அலைக்கற்றை வேகத் தைக் காட்டிலும் 100 மடங்கு அதிகமானது 5-ஜி அலைக்கற்றை யாகும். 5-ஜி அலைக்கற்றை மூலம் அதிக எண்ணிக்கையிலான மின் னணு கருவிகளை இணைக்க முடி யும். இதன் மூலம் எதிர்காலத்தில் அதிக எண்ணிக்கையிலான சேவை களையும் பெற வழி ஏற்படும். தொழில்துறை செயல்பாடுகளுக் கும் இது உதவியாக இருக்கும் என்று ஐடியு தெரிவித்துள்ளது.
தற்போதைய நோய் தொற்று காலத்தில் தொழில்நுட்பம் மிகவும் அவசியமானது. நோய் தொற் றுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவ மனைகளுக்கு செல்போன் மூல மாக தகவல்களை அனுப்ப முடி கிறது என்றும் ஐடியு சுட்டிக் காட்டியுள்ளது.
இன்டர்நெட் இணைப்பு இல் லாத வாடிக்கையாளர்களுக்கும் கோவிட்-19 நோய் தீவிரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த நுட்பம் உதவியாக இருப்பதையும் இதன் மூலம் கோடிக்கணக்கான மக்கள் காப்பாற்றப்படுகின்றனர் என்பதையும் அது குறிப்பிட்டுள் ளது.
முக்கிய செய்திகள்
உலகம்
3 hours ago
உலகம்
4 hours ago
உலகம்
6 hours ago
உலகம்
21 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago