கரோனா வைரஸ் தொடர்பாக எந்தத் தகவலையும் மறைக்கவில்லை: சீனா

By செய்திப்பிரிவு

கரோனா வைரஸ் தொடர்பாக சீனா எந்தத் தகவலையும் மறைக்கவில்லை, எனவே சீன அரசை கட்டளைக்கு பணியும் நாடு போல் அமெரிக்க, அணுகத் தேவையில்லை என்று சீனத் தூதர் லியு சியாமிங் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சீன தூதர் லியு சியாமிங் ”சீனா அரசு கரோனா வைரஸ் தொடர்பாக பொய்யான தகவலை தெரிவித்து இருப்பதாகவும், சீனா மறைப்பதாகவும் தகவல் பரவி வருகின்றன. அவை எதுவும் உண்மையில்லை. சீனா அரசு கரோனா தொடர்பாக மிக வெளிப்படையாக நடந்து கொண்டு வருகிறது. முறையான தகவலை உடனுக்குடன் சீனா வழங்கி வருகிறது.

சில நாடுகள், அதன் நீதிமன்றங்கள் சீனா மீது வழக்குத் தொடர்ந்துள்ளன. இது அர்த்தமற்றது. சில அரசியல்வாதிகள், சில தனிமனிதர்கள் உலகத்தின் காவலாளிபோல் சீனாவை அணுகின்றனர். அவர்கள் இன்னும் பழைய காலத்திலேயே இருக்கின்றனர். அவர்கள் நினைத்துக் கொண்டிருப்பது சீனா காலனிய காலகட்டத்திலோ, நிலபிரபுத்துவ காலகட்டத்திலோ இருந்தது ஆனால் இப்போது இல்லை. அவர்கள் இதைப் புரிந்துகொள்ளாமல் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

சீனா தற்போது வேறு பரிமாணம் பெற்று இருக்கிறது. சீனா அமெரிக்காவின் எதிரி நாடல்ல. ஆனால் அமெரிக்கா எங்களை எதிரிநாடாக கருதினால், அவர்கள் தவறான இலக்கைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று அர்த்தம்” என்று அவர் கூறியுள்ளார்.

கரோனா வைரஸ் சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் இருந்து பரவியதாக அமெரிக்கா சீனா மீது குற்றம்சாட்டியது. இது தொடர்பாக ஆய்வு செய்ய தங்களை சீனா அனுமதிக்க வேண்டும் என்று அமெரிக்கா கோரியது.

ஆனால் அமெரிக்காவை அனுமதிக்க சீனா மறுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

3 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

உலகம்

4 days ago

மேலும்