ஆப்கானிஸ்தானில் வடகிழக்குப் பகுதியில் தலிபான்கள் மற்றும் பாதுகாப்புப் படைகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 26 தலிபான்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்.
இதுகுறித்து உள்ளூர் அதிகாரிகள் தரப்பில், “ஆப்கானிஸ்தானில் வடகிழக்கு பகுதியில் உள்ளது குண்டுஸ் மாகாணம். இங்குள்ள சோதனை சாவடி ஒன்றில் தலிபான்கள் தாக்குதல் நடத்தினர். இதனைத் தொடர்ந்து பாதுகாப்புப் படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். இதில் 26 தலிபான்கள் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தலிபான்கள் மற்றும் அமெரிக்காவுக்கும் இடையே அமைதி பேச்சு வார்த்தைகள் தொடக்கப்பட்டிருந்த நிலையில் மீண்டும் இத்தகைய தாக்குதலை தலிபான்கள் நடத்தி உள்ளனர்.
முன்னதாக, அல்கொய்தா தீவிரவாதிகளுக்கு தலிபான்கள் அடைக்கலம் கொடுத்ததன் காரணமாக ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா தலையிட்டது. கடந்த 2001, செப்டம்பர் 1-ம் தேதி நியூயார்க் நகரில் அல்கொய்தா தீவிரவாதிகள் இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்தனர். அதன் பிறகு ஏற்பட்ட மோதலில் இதுவரை அமெரிக்கா தரப்பில் 2,400 அமெரிக்க வீரர்கள் பலியாகியுள்ளனர். 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆப்கன் ராணுவத்தினர், பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் அமைதி நிலவ வேண்டி, அமெரிக்கா, தலிபான் தீவிரவாதிகளுக்கு இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க சமாதான உடன்படிக்கை தோஹாவில் கையொப்பமானது.
முக்கிய செய்திகள்
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago