அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் கரோனாவுக்கு 1,738 பேர் பாதிப்பு

By செய்திப்பிரிவு


அமெரிக்காவில் கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் 1,738 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமெரிக்காவில் இயங்கும் மருத்துவ பல்கலைகழகமான ஜான் ஹாப்கின்ஸ் வெளியிட்ட அறிக்கையில் , “அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,738 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இந்த எண்ணிக்கை நேற்றைய பாதிப்பு எண்ணிக்கையைவிட குறைவு.

மேலும் அமெரிக்காவில் கரோனா வைரஸ்ஸுக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 47,681 ஆக அதிகரித்துள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் கரோனா தொற்றுக்கு இதுவரை 8,49,092 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 47,681 பேர் பலியாகி உள்ளனர். 84,050 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்த நிலையில் கரோனா தொற்றால் பாதிப்பட்டவர்கள் குணமடைய அமெரிக்காவில் 1600 இடங்களில் பிளாஸ்மா சிகிச்சைக்கு கையெழுத்திட்டுள்ளனர்.

கரோனா வைரஸ் காரணமாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா சிகிச்சை, ஆய்வு ஆகியவற்றுக்காக இதுவரை 7 பில்லியன் டாலர்களை செலவழித்துள்ளதாக கூறப்படுகிறது.

அமெரிக்காவில் கரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த முடியாமல் அதிபர் ட்ரம்ப் திணறி வருகிறார். இந்த நிலையில் மாகாண ஆளுநர்கள் செயல்பட சிறப்பாக செயல்பட ட்ரம்பின் செயல்பாடு போதுமானதாக இல்லை என்று கடுமையான விமர்சனங்கள் எழ தொடங்கியுள்ளன.

உலகம் முழுவதும் கரோனா தொற்றுக்கு 26, 39,025 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 1,84,263 பேர் பலியாகி உள்ளனர். 7 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் குணமடைந்து மீண்டுள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

2 hours ago

உலகம்

3 hours ago

உலகம்

8 hours ago

உலகம்

9 hours ago

உலகம்

11 hours ago

உலகம்

1 day ago

உலகம்

1 day ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

உலகம்

2 days ago

மேலும்