அமெரிக்காவில் அமெரிக்கக மக்களின் வேலைவாய்ப்பை பாதுகாக்கும் வகையில் புதிய குடியேற்றம், கிரீன் கார்டு வழங்குதல் ஆகியவற்றை தற்காலிகமாக 60 நாட்களுக்கு நிறுத்தி வைக்கும் உத்தரவில் அதிபர் ட்ரம்ப் கையொப்பமிட்டார்
இந்த உத்தரவின் மூலம் அமெரிக்காவில் சட்டபூர்வமாக அமெரிக்காவில் ேவலைவாய்ப்புக்காக நுழைவதற்காக அனுமதி கோருபவர்களை கடுமையாகப் பாதிக்கும். அதேசமயம் அங்கு ஏற்கெனவே வசித்துவரும் வெளிநாட்டவர்களை பாதிக்காது
அமெரிக்காவில் கரோனா வைரஸ் மோசமான உயிரிழப்புகளையும், மக்களுக்கு உடல்ரீதியான பாதிப்புகளையும் ஏற்படுத்தி வருகிறது. இதுவரை 8.48 லட்சம் பாதிக்கப்பட்டுள்ளனர், 47ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள 50க்கும் மேற்பட்ட மாநிலங்களில் கரோனா வைரஸ் அச்சம் காரணமாக லாக் டவுன் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறவில்லை. இதனால் பொருளாதார நடவடிக்கைகள் ஸ்தம்பித்துள்ளன.
கரோனா வைரஸ் பொருளாதார ரீதியாகவும் அமெரிக்காவுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலையின்மையையும் அதிகரித்துள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் 2.2 கோடி மக்கள் வேலையின்மை உதவித்தொகைக்கு அமெரிக்க அரசிடம் விண்ணப்பித்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் வேலையின்மை அளவு அதிகரித்து வருகிறது.
அமெரிக்காவில் பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் ஹெச்1பி விசா மூலம் இந்தியர்களும், சீனர்களும் அதிகமான அளவில் பணியாற்றுகின்றனர்.
அமெரிக்காவில் உள்ள வேலைவாய்ப்புகளை அமெரிக்க மக்களுக்கு வழங்கும் வகையில் , பாதுகாக்கும் வகையில் ஹெச்1பி விசாவையும், குடியேறுபவர்களையும் தற்காலிகமாகத் தடை செய்ய நிர்வாகரீதியாக உத்தரவு பிறப்பிக்க ட்ரம்ப் திட்டமிட்டு அது தொடர்பாக கடந்த சில இரு நாட்களுக்கு முன் ட்விட்டரி்ல குறிப்பிட்டார்
இந்நிலையில் அமெரிக்காவில் தற்காலிகமாக குடியேறுபவர்களை 60 நாட்களுக்கு தடை செய்யும், க்ரீன் கார்டுகளை வழங்குவதை 60 நாட்களுக்கு நிறுத்திவைக்கும்உத்தரவில் அதிபர் ட்ரம்ப் நேற்று கையொப்பமிட்டார். அதுகுறித்து அதிபர் ட்ரம்ப் நிருபர்களிடம் கூறியதாவது:
நான் உங்களைச் சந்திக்கும் முன்பாகத்தான் அந்த உத்தரவில் நான் கையொப்பமி்ட்டு வந்தேன். அமெரிக்காவில் தற்காலிகமாக குடியேற்றத்தைத் தடுத்தல், க்ரீன் கார்டு வழங்குவதை நிறுத்துவது மூலம் அமெரிக்காவில் வேலையின்மையைத் தடுக்க முடியும்.
அமெரி்க்க மக்கள் அதிகமாக வேலைவாய்ப்பு பெறுவார்கள். கரோனா வைரஸால் அமெரிக்க மக்கள் பாதிக்கப்பட்டு, ேவலையிழந்த நிலையில், அவர்களுக்கு பதிலாக வேறுநாட்டிலிருந்து மக்களை வேலையில் அமர்த்துவது தவறானது.
அதிகமான தொழிலாளர்கள் இருப்பதும் அனைத்து தொழிலாளர்களையும், திறமையானவர்களையும் பாதிக்கும். குறிப்பாக வேலைவாய்ப்புக்கும், வேலையின்மைக்கும் இடையிலான பிரிவில் இருக்கும் தொழிலாளர்களை பாதிக்கும்.
கடந்த பலஆண்டுகளாக தொழிலாளர்கள் எந்தவிதமான விகிதாச்சாரம் இன்றி ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், சிறுபான்மையினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு கல்லூி படிப்புகூட இன்றி பிரதிநிதித்துவம் அளிப்பட்டது.
நாடு சந்திக்கும் வேலையின்மை பிரச்சினைக்கு தற்காலிக நடவடிக்கையாகவே இது எடுக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் சந்தையை தொடர்ந்து 60 நாட்களுக்கு கண்காணிப்போம் தேவைப்பாட்டால் மாற்றம் செய்து நீட்டிக்கப்படும் இல்லாவிட்டால் முடித்துக்கொள்ளப்படும்
இவ்வாறு அதிபர் ட்ரம்ப் தெரிவித்தார்
இந்த புதிய உத்தரவின்படி வெளிநாட்டினரிடம் குடியேற்ற விசா இல்லாவிட்டால் அதில் குறிப்பிட்ட ேததிவரை மட்டுமே செல்லுபடியாகும். அதாவது வெளிநாட்டினரிடம் விசா தவிர்த்து அதிகாரபூர்வமான பயண ஆவணங்கள் இல்லாவி்ட்டால் விசாவில் குறிப்பிட்ட தேதிவரை மட்டுமே தங்க முடியும்.
மேலும், அமெரிக்காவில் தற்போது வசித்து வரும் வெளிநாட்டினரும் 60 நாட்களுக்கு க்ரீன் கார்டு விண்ணப்பிக்க முடியாது, புதிதாக ேவலைக்கு வருபவர்களும் வர முடியாது. முதலீட்டின் அடிப்படையில் சுகாதாரப்பிரிவினர், மருத்துவர்களுக்கு மட்டும் இதில் விதிவிலக்கு உண்டு.
அமெரிக்கர்களின் மனைவி, அவர்களின் குழந்தைகள், வளர்ப்புக் குழந்தைகள் க்ரீன் கார்டுக்கு விண்ணப்பித்திருந்தால் இதிலிருந்து விலக்கு பெற முடியும்
முக்கிய செய்திகள்
உலகம்
23 hours ago
உலகம்
1 day ago
உலகம்
1 day ago
உலகம்
2 days ago
உலகம்
2 days ago
உலகம்
3 days ago
உலகம்
3 days ago
உலகம்
4 days ago
உலகம்
4 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
5 days ago
உலகம்
6 days ago
உலகம்
6 days ago